புதுடில்லி: நாட்டின் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் விலையை அதிகரித்து வரும் நேரத்தில், பஜாஜ் நிறுவனம் தனது டொமினார் 250-யின் விலையை சுமார் ரூ .17,000 குறைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய வாகன உற்பத்தியாளரான பஜாஜ் (Bajaj) இந்த அட்டகாசமான இருசக்கர வாகனத்தின் விலையை ரூ .16,800 குறைத்துள்ளது. சமீபத்திய விலைக் குறைப்புக்கு பிறகு, பஜாஜ் டோமினார் 250 இப்போது ரூ .1.54 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.


விலைக் குறைப்பை சாத்தியமாக்குவதற்கு பஜாஜ் இந்த வாகனத்தின் தோற்றத்திலும் அம்சங்களிலும் எந்த மாற்றமும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே பைக் ஜூலை 6 ஆம் தேதி ரூ .1.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) க்கு விற்கப்பட்டது. இருப்பினும், பஜாஜ் டொமினார் 250 இல் உள்ள வண்ண தேர்வுகளை நிறுவனம் நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளது.


முன்னதாக, பஜாஜ் டோமினார் 250 கேன்யான் ரெட், சார்கோல் பிளாக், ஆரா கிரீன் மற்றும் வைன் பிளாக் ஆகிய வண்ணங்களில் கிடைத்தது. ஆனால் இப்போது, ​​நீங்கள் இந்த பைக்கை (Bike) வாங்க விரும்பினால், கேன்யான் ரெட் மற்றும் சார்கோல் பிளாக் ஆகிய இரு வண்ணங்கள்தான் கிடைக்கும்.


ALSO READ: Ola Electric Scooter: அட்டகாச அம்சங்களுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்


பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் வணிகத்தின் தலைவர் சரங் கனடே, “பைக்கில் பயணம் செய்வது உலகின் உண்மையான அனுபவங்களை உணர்வதற்கான கதவுகளை திறக்கிறது. இது நமது தன்மையை விரிவுபடுத்தி குணாதிசயங்களை விஸ்தரிக்கின்றது என்று பஜாஜ் ஆட்டோவில் நாங்கள் திடமாக நம்புகிறோம்” என்று கூறினார். 


சாலைகளில் பயணம் செய்யும் அனுபவத்தை விட இன்னும் மேலான அனுபவங்களை ஓட்டுநர் பெறுகிறார் என்று கனடே கூறுகிறார். இந்த பைக் சரியான செயல்திறன், கூர்மையான வடிவமைப்பு மற்றும் சிறந்த ரைடிங் அனுபவத்தை தருவதால், இதில் செய்யும் பயணம் புதிய அனுபவத்தை அளிக்கும் என நிறுவனம் நம்புகிறது.


"நாட்டில் ஸ்போர்ட்ஸ் டூரிங் பிரிவை ஒரு மோட்டார் சைக்கிள் மூலம் உருவாக்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.  ‘Born To Sprint and Built To Tour' என்பது எங்கள் தாரக மந்திரமாக உள்ளது” என்று நிறுவனம் கூறுகிறது. 


"இரு சக்கர (Two Wheeler) மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தில் தொழில்துறை முழுவதும் விலைகள் உயர்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், டொமினார் 250-யின் விலையை குறைத்து, ஸ்போர்ட்ஸ் டூரிங் எனப்படும் விளையாட்டு சுற்றுப்பயணத்தை அனைவரும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம்," என்று சரங் கனடே கூறினார்.


டோமினார் 250-யில் எல்.ஈ.டி விளக்குகள், ஸ்பிளிட் சீட்டிங், அலாய் சக்கரங்கள் ஆகியவற்றுடன் பிற உயர்தர அம்சங்களும் உள்ளன. இந்த பைக்கின் எடை சுமார் 180 கிலோ ஆகும். இது 13 லிட்டர் திறன் கொண்ட எரிபொருள் டேங்கைக் கொண்டுள்ளது.


ALSO READ: Ola, Yamaha, Suzuki: அட்டகாசமான Electric scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன, வாங்க தயாரா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR