Ola Electric Scooter: அட்டகாச அம்சங்களுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்

நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் மின்சார வாகனங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். வாகன உற்பத்தி நிறுவனங்களும் மின்சார வாகன உற்பத்தியில் முழு வேகம் காட்டி வருகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 28, 2021, 03:28 PM IST
  • இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மின்சார வாகனமாக ஓலா எலக்ட்ரிக் உள்ளது.
  • மிக விரைவில் ஓலா எலக்ட்ரிக் தொழிற்சாலை செயல்படத் துவங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
  • ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் பஜாஜ் சேத்தக்குடன் போட்டியிடும்.
Ola Electric Scooter: அட்டகாச அம்சங்களுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் title=

Ola Electric Scooter: நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக மக்கள் மின்சார வாகனங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். வாகன உற்பத்தி நிறுவனங்களும் மின்சார வாகன உற்பத்தியில் முழு வேகம் காட்டி வருகின்றன. 

இந்த நேரத்தில் இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மின்சார வாகனமாக (Electric Vehicle) ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) உள்ளது. ஓலா எலக்ட்ரிக் விரைவில் இந்தியாவில் தனது மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்கூட்டர் பற்றிய பேச்சு நீண்ட நாட்களாக சந்தையில் உள்ளது. கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவின் அதன் அறிமுகம் தாமதமானது, இப்போது நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் இதை அறிமுகப்படுத்தக்கூடும் என கூறப்படுகின்றது. 

ஓலா நிறுவனம் ஏற்கனவே ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கின் வலையமைப்பை இந்திய நகரங்களில் பரப்பத் தொடங்கியுள்ளது. இதன் கீழ் இந்தியாவின் 400 நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜிங் மையங்கள் (Charging Points) உருவாக்கப்படும். 

ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன

பல கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் முதல் மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி தொழிற்சாலையை ஓலா அமைக்கும் என்று நிறுவனம் அறிவித்தது. இதன் காரணமாக சுமார் பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இது உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி மையமாக இருக்கும், இங்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படும்.

ALSO READ: Ola, Yamaha, Suzuki: அட்டகாசமான Electric scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன, வாங்க தயாரா?

விற்பனை மிக விரைவில் துவங்கலாம்

மிக விரைவில் இந்த தொழிற்சாலை செயல்படத் துவங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இங்கு 20 லட்சம் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்படும். தொழிற்சாலை முழுமையாக அமைக்கப்பட்ட பின்னர் விரைவில் ஸ்கூட்டர்களின் விற்பனையும் தொடங்கப்படும். அதாவது, ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) ஸ்கூட்டரை இந்தியாவில் மக்கள் கூடிய விரைவில் வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. 

18 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும்

ஓலாவைப் பொறுத்தவரை, இந்த மின்சார வாகனங்களுக்கு வலுவான சார்ஜிங் நெட்வொர்க் தேவைப்படுகிறது. நிறுவனத்தின் ஹைபர்கார்ஜர் நெட்வொர்க் மிகப்பெரிய சார்சிங் நெட்வொர்க்காக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதில் இரு சக்கர வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சார்ஜிங் நெட்வொர்க் நாடு முழுவதும் 400 நகரங்களில் இருக்கும். இதில் இந்த மின்சார ஸ்கூட்டர்கள் சார்ஜ் செய்யப்படும். அவற்றில் ஒரு லட்சம் சார்ஜிங் புள்ளிகள் வழங்கப்படும். இந்த சார்ஜிங் நெட்வொர்க் மிகவும் வலுவாக இருக்கும். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெறும் 18 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்து விடலாம். அதன் பிறகு 75 கி.மீ வரையிலான வரம்பை இந்த ஸ்கூட்டர்கள் கொடுக்கும். ஸ்கூட்டரின் விலை குறித்து இன்னும் நிறுவனம் எதையும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. 

பஜாஜ் சேதக்குக்கு போட்டியாக இருக்கும் 

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் பஜாஜ் சேத்தக்குடன் (Bajaj Chetak) போட்டியிடும். இந்த ஸ்கூட்டர் சந்தையில் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. இதன் விலை ரூ .1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 3 கிலோவாட் திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்சார மோட்டார் 5.36 பிஹெச்பி பவர் மற்றும் 16 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. முழு சார்ஜிற்குப் பிறகு, இந்த ஸ்கூட்டர் ஈகோ பயன்முறையில் 95 கி.மீ மற்றும் ஸ்போர்ட் பயன்முறையில் 85 கி.மீ. வரையிலான வரம்பை அளிக்கின்றது.

ALSO READ: Electric Scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன Hero, Honda: 5 மடங்கு செலவு குறையும்!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News