வங்கி மற்றும் பணியாளர் தேர்வு நிறுவனம், 2020 ஆம் ஆண்டின் IBPS கிளார்க் பூர்வாங்க தேர்வை 2020 டிசம்பர் 5, 12, மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்துகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவம்பர் 20 அன்று IBPS, 2020 ஆம் ஆண்டின் IBPS கிளார்க் பிரிலிம்ஸ் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டது. 2020 IBPS ப்ரிலிமினரி தேர்வுகளுக்கு பதிவு செய்துள்ள மாணவர்கள் தங்கள் அட்மிட் கார்டுகளை ஆன்லைனில் ibps.in இல் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அட்மிட் கார்டில் தேர்வு நடக்கும் மையம் மற்றும் ஸ்லாட் ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து முக்கிய தகவல்களும் இருக்கும்.


IBPS கிளர்க் பூர்வாங்கத் தேர்வு 2020-க்கான (IBPS Clerk 2020 Prelims 2020) முடிவுகள் டிசம்பர் 31, 2020 அன்று அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு, COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்வுகள் நடப்பதால், தேர்வில் பங்கு கொள்பவர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய சில சிறப்பு வழிமுறைகளை IBPS வெளியிட்டுள்ளது. இருப்பினும், வினாத்தாள் முறை மற்றும் பிற விஷயங்கள் முந்தைய ஆண்டுகளைப் போலவே தொடர்கின்றன.


ALSO READ: IBPS Clerk Prelims தேர்வு 2020 அட்மிட் கார்டு வெளியீடு; பதிவிறக்குவது எப்படி?


IBPS Clerk 2020 Prelims Exam: தேர்வு எழுதுவோருக்கான முக்கியமான வழிமுறைகள் பின்வருமாறு:


1) தேர்வு எழுதுவோர் தேர்வு துவங்கும் நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் தேர்வு மையத்தை அடைவதை உறுதி செய்ய வேண்டும்.


2) COVID நடவடிக்கையாக, அனைவரும் முகக்கவசங்களை கண்டிப்பாக அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் கையுறைகளையும் அணியலாம்.


3) தேர்வு மையத்தில் குடிதண்ணீர் அளிக்கப்படாது என்பதால், தேர்வு எழுதுவோர் தங்கள் சொந்த தண்ணீர் பாட்டில்களை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


4) வழிகாட்டுதல்களின் படி, தேர்வு எழுதுவோர், ஹேண்ட் சேனிடைசர் (50 மில்லி), பேனா, அட்மிட் கார்டு மற்றும் புகைப்பட ஐடி ஆதாரம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.


5) தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன், மாணவர்கள் ஆரோக்கிய சேது செயலியில் தங்கள் நிலையை காட்ட வேண்டும்.


6) கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோய் பரவாமல் இருக்க, அனைவரும் கண்டிப்பாக தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். வரிசைகளில், குறிக்கப்பட்ட இடங்களிலும் மட்டுமே நிற்க வேண்டும்.


தேர்வு மையத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லக் கூடாதவை எவை?


ஜியோமெட்ரி / பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பை, கால்குலேட்டர், ஸ்கேல், ரைட்டிங் பேட், பென் டிரைவ்கள், லாக் டேபிள், எலக்ட்ரானிக் பேனா / ஸ்கேனர், மொபைல் போன், புளூடூத், இயர்போன்கள், மைக்ரோஃபோன், பேஜர், ஹெல்த் பேண்ட், கேமரா போன்ற தகவல்தொடர்பு சாதனங்களை நீங்கள் கொண்டு செல்ல முடியாது. எந்தவித உலோக பொருட்களும் உணவுப் பொருட்களும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.


Goggles, கைப்பைகள், ஹேர்-பின், ஹேர்-பேண்ட், பெல்ட், கேப், கைக்கடிகாரம் போன்ற பிற பொருட்களும் அனுமதிக்கப்படாது.


ALSO READ: ஆசிரியராக பணியாற்ற வேண்டுமா? edudel.nic.in இல் விண்ணப்பிக்கவும்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR