கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவில் இருந்து மக்கள் மீண்டு வரும் இந்த சமயத்தில், மீண்டும் சேமிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் விதமாக இந்திய வங்கிகள் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தினை உயர்த்த ஆரம்பித்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில நாட்களுக்கு முன்பு எஸ்பிஐ, ஐசிஐசிஐ என அடுத்தடுத்த வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. அதன்படி தற்போது இரண்டாவது முறையாக ஐசிஐசிஐ வங்கி, பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை மீண்டும் 2 கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளது. மேலும் 290 நாட்களில் இருந்து 10 ஆண்டுகள் வரை முதிர்வு காலத்துடன் கூடிய பிக்சட் டெபாசிட்டிற்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது. எனவே இந்த புதிய கட்டணங்கள் மே 16, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன.


மேலும் படிக்க | ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு அடித்த புதிய ஜாக்பாட்!


ஐசிஐசிஐ வங்கி பல்வேறு தவணைக்காலங்களின் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை 10-20 அடிப்படை புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது. 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 2.5 சதவீத வட்டியும், 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 3.5 சதவீத வட்டியும் வழங்கப்படும். 185 நாட்கள் முதல் 289 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட்டிற்களுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இல்லாமல் 4.4 சதவீதமாக இருக்கும். மேலும் இதில் குறைந்தபட்சமாக 2.50% வட்டியும், அதிகபட்சமாக 5.75% வட்டியும் வழங்குகிறது ஐசிஐசிஐ வங்கி.


ஐசிஐசிஐ வங்கியின் புதிய வட்டி விகிதம்:
7 நாட்கள் - 14 நாட்கள்: 2.50%
15 நாட்கள் - 29 நாட்கள்: 2.50%
30 நாட்கள் - 45 நாட்கள்: 3.00%
46 நாட்கள் - 60 நாட்கள்: 3.00%
61 நாட்கள் - 90 நாட்கள்: 3.00%
91 நாட்கள் - 120 நாட்கள்: 3.50%
121 நாட்கள் - 150 நாட்கள்: 3.50%
151 நாட்கள் - 184 நாட்கள்: 3.50%
185 நாட்கள் - 210 நாட்கள்: 4.40%
211 நாட்கள் - 270 நாட்கள்: 4.40%
271 நாட்கள் - 289 நாட்கள்: 4.40%
290 நாட்கள் - 1 ஆண்டு: 4.50%
1 ஆண்டு - 389 நாட்கள்: 5.10%
390 நாட்கள் - 15 மாதங்கள்: 5.10%
15 மாதங்கள் - 18 மாதங்கள்: 5.10%
18 மாதங்கள் - 2 ஆண்டுகள்: 5.10%
2ஆண்டுகள் 1 நாள் - 3 ஆண்டுகள்: 5.40%
3ஆண்டுகள் 1 நாள் - 5 ஆண்டுகள்: 5.60%
5ஆண்டுகள் 1 நாள் - 10 ஆண்டுகள்: 5.75%


ஐசிஐசிஐ வங்கி தனது கோல்டன் இயர்ஸ் எஃப்டிக்கு 6.35 சதவீத வட்டியை வழங்குகிறது. 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான சிறப்பு எஃப் திட்டம் கோல்டன் இயர்ஸ் எஃப் என அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு எஃப் விகிதம் அக்டோபர் 7, 2022 வரை அமலில் இருக்கும்.


மேலும் படிக்க | டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR