உணவு, சப்ளை மற்றும் நுகர்வோர் சப்ளை துறையால் வழங்கப்படும் ஒரு ஆவணம் ரேஷன் கார்டு.  நாட்டின் குடிமக்களுக்கு மானிய விலையில் உணவு மற்றும் இதர பொருட்களை வழங்கும் நோக்கில் இந்த ஆவணம் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, ரேஷன் கார்டு நாடு முழுவதும் முக்கிய அடையாள சான்றாகவும் செயல்படுகிறது. ரேஷன் கார்டை ஆன்லைனில் எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பதையும், ரேஷன் கார்டில் இருக்கும் தகவல்களை  எவ்வாறு புதுப்பிப்பது என்பதையும் இங்கே பார்க்கலாம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போது நீங்கள் ரேஷன் கார்டைப் பெற நீங்கள் அரசு அலுவலகத்திற்குச் செல்லத் தேவையில்லை. இதற்கான வலைத்தளத்திற்கு சென்று, கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ரேஷன் கார்டைப் பெறலாம். 


ALSO READ | Ration Card : ரேஷன் பொருட்கள் பெறுவதில் பிரச்சனையா? இந்த எண்களில் புகார் அளிக்கலாம்


ரேஷன் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி:


உங்கள் ரேஷன் கார்டை டவுன்லோடு செய்ய TNPDS (Tamil Nadu Public Distribution Service) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.


உங்கள் TNPDS கணக்கில் லாக் இன் செய்ய வேண்டும்.


உங்கள் கணக்கில் உள்நுழைந்த பிறகு, நீங்கள் TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் பிரிண்ட் செய்வதற்கான டாப்-ஐயும் காணலாம்.


இப்போது நீங்கள் விரும்பிய மொழியைத் தேர்ந்தெடுத்து பிரிண்ட்  ‘Print’ என்பதைக் கிளிக் செய்க.
பின்னர்  PDF கோப்பை சேமிக்க சேமி என்பதைக் கிளிக் செய்க.


விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்து ஸ்மார்ட் ரேஷன் கார்டின் அச்சு எடுத்து, அருகிலுள்ள சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அணுகி புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டைப் பெறலாம்.


உதவி எண் 
மேலும் உதவி மற்றும் தகவல்களுக்கு ஹெல்ப்லைன் எண்களை 1967 & 1800 425 5901 ஐ தொடர்பு கொள்ளலாம்.


Also Read | Ration Card: ரேஷன் அட்டையில் உள்ள குறியீடுகளுக்கு அர்த்தம் தெரியுமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR