அரசு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், ஏடிஎம் பரிவர்த்தனை தொடர்பான விதிகளில் வங்கி பெரிய மாற்றத்தை செய்துள்ளது. அதன்படி கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. எனவே நீங்கள் ஏடிஎம் அல்லது கார்டு மூலமாக பணப் பரிவர்த்தனை செய்தால், அதற்கு முன் எந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது
இந்த நிலையில் தற்போது கனரா வங்கி ஏடிஎம் பணம், POC மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கான தினசரி பரிவர்த்தனை வரம்பை அதிகரித்துள்ளது. இதுகுறித்து வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவலை அளித்துள்ளது. மேலும் இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வரவுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க | ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது இந்த 4 தவறுகளை செய்தால், நீங்கள் மோசடிக்கு ஆளாகலாம்!


இப்போது வரம்பு என்ன?
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பையும் வங்கி அதிகரித்துள்ளது. அதன்படி கிளாசிக் டெபிட் கார்டின் ஏடிஎம் பரிவர்த்தனை வரம்பை ஒரு நாளைக்கு 40,000 லிருந்து 75,000 ஆக வங்கி உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



பிஓஎஸ் வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது
இது தவிர, இந்த கார்டுகளுக்கான தினசரி பிஓஎஸ் வரம்பை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தவும் வங்கி முடிவு செய்துள்ளது.


இது தவிர, பிளாட்டினம் / பிசினஸ் / டெபிட் கார்டின் பண பரிவர்த்தனை வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சமாக உயர்த்த வங்கி முடிவு செய்துள்ளது. அதே சமயம் பிஓஎஸ்க்கான தினசரி பரிவர்த்தனை வரம்பை 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இந்த 2 விஷயங்கள் செய்தால் மின்கட்டணம் அதிகம் வராது.. பணத்தை மிச்சப்படுத்தலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ