ஒவ்வொரு ஆண்டும், பருவ மழை காலத்தில் வீட்டிற்குள் தண்ணீர் வருவதும்,  வெள்ளம் போன்ற நிலை ஏற்படுவதும், பார்கிங் செய்துள்ள கார் வெள்ளத்தில் மூழ்கி, வாகனங்களுக்கு பெரும் சேதம் ஏற்படுவதும் வாடிக்கையாகி விட்டது. அத்தகைய சூழ்நிலையில், வாகன உரிமையாளர்கள் வெள்ளம் மற்றும் கனமழை (Heavy Rain) காரணமாக சேதமடையாமல் தங்கள் வாகனங்களைப் பாதுகாக்க உதவும்  சில வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. உயர்வான இடத்தில் பார்க்கிங் செய்தல்


உங்கள் வாகனத்தை உயரமான மேற்பரப்பில் நிறுத்துவதன் மூலம், வாகனத்திற்குள் தண்ணீர் புகுந்து இயந்திர பாகங்கள் சேதமடையும் அபாயத்தை குறைக்கலாம். உங்களிடம் செடான் அல்லது ஹேட்ச்பேக் இருந்தால், இந்த வாகனங்கள் பொதுவாக தரையை ஒட்டி இருப்பதால் இது மிகவும் முக்கியமானது. மேலும் உங்கள் வாகனத்தை கவரால் மூடி வைக்கவும். இதனால், காற்று வீசுவதால், வாகனத்தின் மீது விழும் பொருட்களிலிருந்து பாதுகாக்கலாம்.


2. ஜன்னல்களை மூடி வைக்கவும்


தண்ணீர் வாகனத்திற்குள் நுழையாதவாறு ஜன்னல்களை நன்றாக மேலே ஏற்றி மூடவும். இதனால், வாகனத்தில் உள்ள ஸ்டீரியோ சிஸ்டம், பவர் விண்டோ போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை பாதுகாக்கும்.  எனினும் தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் வாகனம் ஓட்டும்போது ஜன்னல்களை  மூடக் கூடாது. ஏனெனில் வாகனம் மழை நீரில் (Rain) அல்லது வெள்ள நீரில் சிக்கினால் இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும்.


ALSO READ | டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டதா; வீட்டில் இருந்த படியே டூப்ளிகேட் DL பெறலாம்..!!


3. உங்கள் பேட்டரியை ஆப் செய்யவும்


முடிந்தால், உங்கள் வாகனத்தின் பேட்டரி இணைப்பை அகற்றவும். இது எஞ்சின் உள்ள பகுதிக்குள் தண்ணீர் நுழைந்து மின பொருட்கள் மூலம் ஷார்ட் சர்க்யூட் ஆவதைத் தடுக்கும்.


4. என்ஜினை ரீஸ்டார்ட் செய்ய வேண்டாம்


வாகனத்தின் பாதி டயர் நீரில் மூழ்கிவிட்டாலோ அல்லது வாகனத்தின் எக்ஸாஸ்ட் பைப் வரை நீர்மட்டம் இருந்தாலோ, இன்ஜினை ரீஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள். தண்ணீரில் சிக்கிய வாகனத்தின் இன்ஜினை ரீஸ்டார்ட் செய்வதால், தண்ணீர் என்ஜின் இருக்கும் பகுதிக்குள் நுழையும். இதனால், ஹைட்ரோஸ்டேடிக் லாக்  ஏற்படலாம். இந்த சூழ்நிலையில், தண்ணீர் என்ஜின் சிலிண்டர்களில் நுழைந்து பிஸ்டன்கள், தீப்பொறி பிளக்குகள் மற்றும் வால்வுகளை சேதப்படுத்துகிறது. இந்த சேதத்தை சரிசெய்வதற்கு நிறைய செலவாகும். இயந்திரத்தை முழுமையாக மாற்றும் நிலை கூட ஏற்படலாம்.


பெரும்பாலான வாகனக் காப்பீட்டு பாலிஸியில் வெள்ளம் காரணமாக ஏற்படும் என்ஜின் சேதத்தை ஈடுசெய்யாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, தண்ணீரில் தேங்கி நின்றாலோ அல்லது நீர்மட்டம் வெளியேற்றும் குழாய்/ டயரின் பாதி உயரத்தை அடைந்தாலோ வாகனத்தின் இன்ஜினை ரீஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள். 


ALSO READ | IRCTC உடன் இணைந்து மாதம் ₹80,000 சம்பாதிக்கும் சிறந்த வழி..!!


5. தண்ணீர் குறையும் வரை காத்திருங்கள்


கதவுகளைத் திறப்பதற்கு முன் நீர் மட்டம் குறையும் வரை காத்திருங்கள், இல்லையெனில் தண்ணீர் கேபினுக்குள் நுழையும் மற்றும் சில மின் மற்றும் இயந்திர பொருட்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.


ALSO READ | சென்னை பிரதான சாலையில் தொடர்ந்து ஏற்படும் ராட்சத பள்ளங்கள்: பொதுமக்கள் அச்சம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR