புதுடெல்லி: "மனிதன் பசு மூலம் மோக்ஷத்தை அடைகிறான்" என்ற நம்பிக்கையின் அடிப்படையில்,  மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்கும் வகையில், உடல் அதன் தகனத்திற்கு படு மாட்டு வரட்டியை பயன்படுத்துவதற்கான திட்டத்திற்கு தென் டெல்லி மாநகராட்சி (எஸ்.டி.எம்.சி) ஒப்புதல் அளித்துள்ளது. உடல்களை தகனம் செய்வதற்கு வைக்கோலை பயன்படுத்த வும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், நடைமுறைப்படுத்தப்பட்டால், அது மாடுகள் வதை செய்யப்படுவதை தடுப்பதோடு, மரங்கள் வெட்டப்படுவது குறைந்து, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் உதவும். நவம்பர் 9 அன்று  பொது சுகாதாரத்துறை சிறப்பு குழுவால் அனுப்பப்பட்ட பூர்வாங்க தீர்மானத்தை நிலைக்குழு பரிசீலித்து வந்தது.
இந்த முன்மொழிவு இப்போது சபையின் அடுத்த கூட்டத்தில் இறுதி ஒப்புதலுக்காக எடுத்துக் கொள்ளப்படும்.


நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட அனைத்து 104 வார்டுகளிலும் உள்ள எஸ்.டி.எம்.சியின் மயானங்களில் வைக்கோலுடன் வரட்டிகளும் பயம்பட்டால், மரக்கட்டைகள் பயன்பாடு குறைந்து, மரங்கள் வெட்டப்படாமல் பாதுகாப்பதோடு, சுற்று சூழல் பாதுகாப்பிற்கும் உதவும்.


மரம் கட்டைகளை கொண்டு உடலை தகனம் செய்ய ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக எடுக்கும் அதே வேளையில், வரட்டிகளை பயன்படுத்தி தகனம் செய்வதற்கு இரண்டு-மூன்று மணி நேரம் தான் தேவைப்படுகிறது என்றும் தீர்மானம் கூறுகிறது. 


மரங்கள் வெட்டப்படுவதை குறைக்கவும் சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டும், உடல் தகனம் செய்ய, பசு வரட்டியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பசு மூலம் மனிதனுக்கு மோக்‌ஷம் கிடைக்கிறது எனவும் நம்பப்படுகிறது


"போபால் மற்றும் நாக்பூர் (Nagpur) போன்ற பல நகரங்களில் இந்த் முன்னோடி திட்டங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, ஐ.ஐ.டி-டெல்லியும் இதே போன்ற திட்டத்தை சில ஆண்டுகளில் கொண்டு வந்தன ” என மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.


டெல்லியில் ஆண்டுதோறும் சுமார் 90,000 தகனங்கள் நடைபெறுவதாக பொது சுகாதாரத் துறை மதிப்பிட்டுள்ளது. இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், மாட்டு கொட்டகைகளில், கழிவு மேலாண்மைக்கு  (Waste Management) சிறந்த தீர்வு கிடைக்கும் என்றும், லட்சக்கணக்கான மரங்களும் சேமிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். மதிப்பீடுகளின்படி, தலைநகரின் (Delhi) மயானங்களில் உடலை தகனம் செய்ய ஆண்டுதோறும் சுமார் மூன்று நான்கு லட்சம் மரங்கள் வெட்டப்படுகின்றன.


ALSO READ | இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் சரிவு.. புதிய பாதிப்புகள் 22,272  மட்டுமே..!!  

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR