இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் சரிவு.. புதிய பாதிப்புகள் 22,272 மட்டுமே..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக  22,272  பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 26, 2020, 03:44 PM IST
  • கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,47,343 ஆக உயர்ந்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் 22,274 நோயாளிகள் குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
  • நாட்டில் தொற்று பாதிப்பு விகிதம் 7 சதவீதம் ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் சரிவு.. புதிய பாதிப்புகள் 22,272  மட்டுமே..!! title=

நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாட்டில் தொடர்ந்து ஆறாவது நாளாக 25,000 க்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தினசரி பதிவாகும் புதிய பாதிப்புகள் பற்றி குறிப்பிடுகையில், நாட்டில் சனிக்கிழமை 22,272 புதிய கொரோனா பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவினால், இறந்தவர்களின் எண்ணிக்கை 251 ஆக உள்ளது.

கொரோனாவினால் (Corona) இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,47,343 ஆக உயர்ந்துள்ளது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,01,69,118 ஐ எட்டியுள்ளது. இது தவிர, இதுவரை 97 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர், கடந்த 24 மணி நேரத்தில் 22,274 நோயாளிகள் குணமாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. 

வெள்ளிக்கிழமை, புதிய கோவிட் -19 (COVID-19)  தொற்று பாதிப்புகள் 23,068  என்ற அளவில் பதிவாகியுள்ளன. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 336 பேர் இந்த நோயால் இறந்தனர். டிசம்பர் 25 நிலவரப்படி, இது வரை, 16 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூறுகிறது.

நாட்டில் தொற்று பாதிப்பு விகிதம் 7 சதவீதம் ஆக உள்ளது. கொரோனா வைரஸ் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையில், 40 சதவீதம் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நோயாளிகள். அதே நேரத்தில், நாட்டில் கொரோனாவினால் ஏற்பட்ட இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 96 சதவீதமாகவும் உள்ளது.

ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகில் பத்தாவது இடத்தில் உள்ளது. மறுபுறம், கொரோனாவிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், ​​அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது.

ALSO READ | கொரோனாவை வீழ்த்தி சாதனை படைத்ததா மும்பை தாராவி..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News