வருமான வரி செலுத்துவொர் சில முக்கிய விஷயங்களை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். வரிமன வரித்துறை கொடுக்கும் அனைத்து படிவங்கள் பற்றிய புரிதலும் அனைவருக்கும் இருக்க வேண்டும். இந்த படிவங்களில் முக்கியமான படிவமாக இருக்கும் படிவம் 16. இதை வைத்திருப்பது மிக முக்கியம்.  வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவிற்கு முன்னர் முதலாளிகள் இதை வழங்க வேண்டும். படிவம் 16 என்பது, ஒரு நிதியாண்டில், முதலாளி / நிறுவனம், பணியாளருக்கு கொடுக்கும் மொத்த ஊதியத்தின் விவரங்களை கொண்டிருக்கும். மேலும், பணியாளரின் சம்பளத்திலிருந்து பணியாளரின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட (கழிக்கப்படும்) வரித் தொகையையும் இது பட்டியலிடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படிவம் 16 ஒரு பணியாளர்களுக்கு மிக முக்கியமானது. ஏனெனில் இது வருமானம் மற்றும் செலுத்தப்பட்ட வரிக்கான சான்றாக செயல்படுகிறது. மேலும் ஒரு ஊழியர் தனது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது இது தேவைப்படுகிறது.


இந்தப் படிவத்தில் பணியாளரின் நிரந்தரக் கணக்கு எண் (PAN), முதலாளியின் வரி விலக்கு மற்றும் வசூல் கணக்கு எண் (TAN) மற்றும் பணியாளரின் சம்பள விவரங்கள், வரிச் சட்டம், 1961-ன் கீழ் வருமானத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் செய்யப்பட்ட ஏதேனும் கழிவுகள் உட்பட முக்கியமான தகவல்கள் உள்ளன. 


படிவம் 16: மனதில் கொள்ள வேண்டியவை


படிவம் சரியானதா என்பதைச் சரிபார்க்கவும்: 


படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள TAN மற்றும் PAN எண் உட்பட, உங்கள் முதலாளி வழங்கிய படிவம் அனைத்து வகையிலும் சரியானது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.


படிவத்தில் உள்ள தேதிகளைச் சரிபார்க்கவும்: 


படிவம் 16 உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் நிதி ஆண்டிற்கானதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, 2022-2023 நிதியாண்டிற்கான உங்கள் வருமானத்தை நீங்கள் தாக்கல் செய்கிறீர்கள் என்றால், படிவத்தில் ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை தேதிகள் இருக்க வேண்டும்.


வரி செலுத்திய மொத்த தொகை ஒத்துப்போகிறதா என்பதை உறுதிப்படுத்தவும்: 


முதலாளி செலுத்திய மொத்த வரித் தொகையும் நீங்கள் செலுத்திய வரித் தொகையும் பொருந்த வேண்டும். வித்தியாசம் இருந்தால், முரண்பாட்டை தெளிவுபடுத்த உங்கள் முதலாளியை அணுகவும்.


அனைத்து விலக்குகளும் குறிப்பிடப்பட்டுள்ளதா எனச் சரிபார்க்கவும்: 


வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) மற்றும் நிலையான விலக்கு போன்ற அனைத்து விலக்குகளும் படிவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும்.


அனைத்து வரி விலக்குகளின் விவரங்களையும் சரிபார்க்கவும்: 


குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடு செய்வதற்கான பிரிவு 80C மற்றும் மருத்துவக் காப்பீட்டுக்கான 80D போன்ற அனைத்து வரி விலக்குகளின் விவரங்களும் படிவத்தில் இருக்க வேண்டும்.


அசல் ஆவணத்தை வைத்திருங்கள்: 


படிவம் 16 இன் அசல் ஆவணத்தை பாதுகாப்பாக வைத்திருங்கள், ஏனெனில் இது வருமானத்தை சரியாக தாக்கல் செய்ய உதவும்.


மேலும் படிக்க | நடுத்தர வர்க்கத்தினரின் பாக்கெட்டை நிறைக்கும் புதிய வரி விதிப்பு முறை - நிர்மலா சீதாராமன் 


தாக்கல் செய்ய வேண்டிய தேதி: 


படிவம் 16 உங்கள் முதலாளியால் முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் நீங்கள் காலக்கெடுவுக்கு முன்னதாகவே,  உங்கள் வருமானத்தை தாக்கல் செய்ய முடியும். வழக்கமாக இந்த காலக்கெடு ஜூலை 31 ஆக இருக்கும். 


படிவம் 26AS இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: பார்ட் A மற்றும் பார்ட் B.


பார்ட் A, முதலாளிகள், வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் போன்ற பல்வேறு கழிப்பாளர்களால் செலுத்தப்பட்ட அல்லது கழிக்கப்பட்ட வரிகளின் விவரங்களைக் கொண்டுள்ளது. மூலத்தில் கழிக்கப்பட்ட வரிகள் (டிடிஎஸ்) மற்றும் மூலத்தில் வசூலிக்கப்படும் வரிகள் (டிசிஎஸ்) ஆகியவை இதில் அடங்கும்.


பார்ட் B இல் வரி செலுத்துவோர் சுய மதிப்பீடு அல்லது அட்வான்ஸ் வரி மூலம் செலுத்தும் வரிகள், வருமான வரித் துறையால் வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்ட ரீஃபண்ட் பற்றிய தகவல்கள் உள்ளன.


படிவம் 26AS இன் முக்கியத்துவம்: 


வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன் படிவம் 26AS ஐச் சரிபார்ப்பது முக்கியம். ஏனெனில் அதில் வருமான வரிக் கணக்கில் நிரப்பப்பட வேண்டிய முக்கியமான தகவல்கள் இருக்கும்.


படிவம் 26AS இல் காட்டப்பட்டுள்ள TDS/TCS/அட்வான்ஸ் டாக்ஸ்-க்கும், ரிட்டனில் நிரப்பப்பட்டதற்கும் விவரங்களுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடு இருந்தால், அது வருமான வரித் துறையின் நோடீசுக்கு வழிவகுக்கும். பல வருமான ஆதாரங்களைக் கொண்டுள்ள இடங்களில், முதலாளிகள் அல்லது வரிக் கழிப்பாளர்களால் வரி கழிக்கப்பட்டதா என்பதை சரிபார்க்கவும் வரி செலுத்துபவருக்கு இது உதவும்.


மேலும் படிக்க | Income Tax Rebate: சூப்பர் செய்தி!! இனி இவர்கள் வரிவிலக்கின் பலனைப் பெறுவார்கள்!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ