வருமான வரி: ஐடிஆர் தாக்கல் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஜூலை 31 -க்கு பிறகு வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கடும் அபராதம் செலுத்த வேண்டும். ஆனால், தற்போது ஜூலை 31 ஆம் தேதிக்கு முன் கோடிக்கணக்கான வரி செலுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் வருமான வரி கட்ட வேண்டும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இப்போது 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தாலும் வரி கட்ட வேண்டியதில்லை!! இதற்கான வழியை இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் தங்கள் வரியைச் சேமிப்பதற்கான வழிகளை பற்றி தெரிந்துகொள்ள சிஏ அல்லது இதற்கான ஏஜெண்டுகளிடம் செல்கிறார்கள். ஆனால், இந்த சேவைக்கு அவர்களுக்கு ஆலோசனைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த கட்டணத்தையும் நீங்கள் தவிர்க்க விரும்பினால், இந்த பதிவின் மூலம் சில முக்கியமான விதிகளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் வரியை எளிதாக சேமிக்க முடியும்.


இந்த சூத்திரத்தின் மூலம் வரியை தவிர்க்கலாம்: 


1. உங்கள் ஆண்டு வருமானம் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் நிலையான விலக்கு பெறலாம். இதன் கீழ், 50 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இப்போது வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.10 லட்சமாக உள்ளது. அதை எப்படி குறைக்கலாம் என்று பார்க்கலாம்.


2. இப்போது நீங்கள் வருமான வரித் துறை சட்டத்தின் 80C பிரிவின் கீழ் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை க்ளைம் செய்யலாம். இதன் கீழ், நீங்கள் எல்ஐசி, பிபிஎஃப், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், மியூச்சுவல் ஃபண்ட் (இஎல்எஸ்எஸ்) மற்றும் இபிஎஃப் ஆகியவற்றில் முதலீடு செய்த பணத்தைக் கோரலாம். இது தவிர, நீங்கள் வீட்டுக் கடன் தொகையையும் கோரலாம். இப்போது உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகி விடுகிறது.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை


3. தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம். இதன் கீழ், நீங்கள் 80CCD (1B) இன் கீழ் க்ளெயிம் கோர முடியும். இதன் மூலம், 8 லட்சம் ரூபாய் வருமானம் இருக்கும். இதை வேறு எப்படி குறைப்பது என தொடர்ந்து பார்க்கலாம். 


4. இப்போது நீங்கள் வருமான வரிச் சட்டத்தின் 24பி பிரிவின் கீழ் ரூ. 2 லட்சத்தை க்ளெயிம் செய்யலாம். நீங்கள் இந்த தொகையை வீட்டுக் கடன் வட்டியாகச் செலுத்தும்போது இந்த தள்ளுபடி கிடைக்கும். இந்த வழியில், இப்போது நீங்கள் ரூ.6 லட்சம் வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டும்.


5. இப்போது நீங்கள் 80டியின் கீழ் 25 ஆயிரம் ரூபாய் மருத்துவக் காப்பீட்டுக் க்ளெய்மை எடுக்கலாம். இது மட்டுமின்றி, மூத்த குடிமக்களுக்கு (பெற்றோர்) உடல்நலக் காப்பீடு வாங்கினால், கூடுதலாக ரூ.50,000 க்ளெய்ம் செய்யலாம். இதன் மூலம், ரூ.75,000 ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை நீங்கள் பெறலாம்.


6. நீங்கள் ஏதேனும் ஒரு நிறுவனம் அல்லது அறக்கட்டளைக்கு 25 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தால், வருமான வரியின் 80G பிரிவின் கீழ் அதைக் கோரலாம். இப்போது உங்கள் வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.5 லட்சமாக குறைக்கப்படுகின்றது. 


7. ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு, இந்த வருமானத்தில் அரசு 5% தள்ளுபடி தருவதால், அவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வரிமானத்திலும் எளிதாக வரியை சேமிக்க முடியும்.


மேலும் படிக்க | ITR filing: இல்லத்தரசிகளும் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ