இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை அரைஇறுதி போட்டியில் அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த சட்டையின் விலை குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த இந்தியா vs நியூசிலாந்து உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை நேரில் கண்டுகளித்த அனுஷ்கா ஷர்மா, ஒரு பெப்பி சட்டையும், அதற்குப் பொருத்தமான ஷார்ட்ஸும் அணிந்திருந்தார்.  இந்த போட்டியின் போது நடிகை அனுஷ்கா ஷர்மா இந்திய அணியையும் அவரது கணவர் விராட் கோலியையும் உற்சாகப்படுத்துவதைக் காண முடிந்தது. விராட் 50வது சத்தத்தை பூர்த்தி செய்த போது, அனுஷ்கா ஷர்மா தனது அன்பான தருணங்களை பகிர்ந்து கொண்டார்.  இந்த போட்டிக்கு பிறகு அனுஷ்கா ஷர்மாவின் டிரஸ் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சச்சினை வலிக்காமல் அடிக்கும் கோலி - அடுத்த சாதனையையும் தகர்த்தார்


ஒரு நீளமான மேல் சட்டை மற்றும் அதற்கு பொருத்தமான ஷார்ட்ஸில் நடிகை அனுஷ்கா ஷர்மா பெப்பியாக வைத்திருந்தார். வண்ணங்களால் அளகரிப்பட்ட இந்த ட்ரெஸ் பார்க்கும் போதே கண்களை கவர்ந்திழுத்தது.  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த இந்த டிரஸ் துருவ் கபூரின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது ஆகும். இந்த ட்ரெஸ்ஸின் விலை ரூ.19,500. ஒரு ஷார்ட்ஸுடன் வாங்க விரும்பினால், இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இதன் மொத்த விலை ரூ.27,500 ஆகும்.



ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியா, அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 397 ரன்கள் குவித்து, நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் 327 ரன்களுக்கு சுருண்டது.  சூப்பர் பார்மில் இருக்கும் விராட் கோலி, தனது 50வது ஒருநாள் சதத்தை அடித்தார். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்களில் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தினார். 70 பந்துகளில் 105 ரன்களை விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார்.  


398 ரன்களை துரத்திய நியூஸிலாந்து அணி முகமது ஷமியின் பந்துவீச்சில் வீழ்ந்தது.  ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஷமி.  மூன்றாவது விக்கெட்டுக்கு 150 ரன்களுக்கு மேல் இணைந்த வில்லியம்சனை 69 ரன்களில் ஷமி வீழ்த்தி போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பினார்.  பின்னர் அதே ஓவரில் டாம் லாதம் எல்பிடபிள்யூ ரன்னில் 0(2) வீழ்ந்தார்.  ஏற்கனவே லீக் போட்டியில் சதம் அடித்த மிட்செல் 134(119) ரன்களுக்கு அவுட்டானார். இறுதியில் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ஷமி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 9.5 ஓவர்களில் 7 விக்கெட்களை வீழ்த்தி 57 ரன்கள் விட்டு கொடுத்தார். 


மேலும் படிக்க | 50வது சதமடித்தவுடன் சச்சினுக்கு தலை வணங்கிய விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் பிளையிங் கிஸ்.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ