நாடு முழுவதும் இன்று 77ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. மக்கள் பலர் ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொரு வகையில் சுதந்திர தினத்தை ஒவ்வொரு வகையில் அனுசரித்து வருகின்றனர். இன்று பலருக்கும் அரசு விடுமுறை என்பதால், குடும்பத்தினர் அனைவருடனும் நேரம் செலவிட முடியும். இப்படி குடும்பத்தினருக்கு செய்து தர சில மூவர்ண கலர்ஃபுள் ரெசிபிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதை செய்து கொடுத்து ஜாலியாக மாலை பொழுதினை கழியுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூவர்ண புலாவ்:


நம் ஊரில், தாளித்த உணவுகளுக்கென ரசிகர்கள் பலர் உள்ளனர். தாளித்த உணவுகளின் பட்டியலில் முதலில் வருவது, புலாவ் எனப்படும் ஒருவகை சாப்பாடு. புலாவ் வகை உணவுகள் முதலில் வட இந்தியாவில்தான் பிரபலமானவையாக இருந்தன. ஆனால் அவை தற்போது தமிழகத்திலும் பிரபலமடைய ஆரம்பித்து விட்டன. இதை எப்படி செய்வது..? 


பச்சை நிறத்திற்கு புதினா புலாவ்-புதினா மற்றும் கொத்தமல்லியை வைத்து புலாவ் செய்தால் அந்த உணவு, பச்சை நிறத்தில் காட்சியளிக்கும்.


தேங்காய் புலாவ்-வெள்ளை நிறம்: தமிழ் மக்கள் பலருக்கு தேங்காய் பால் எடுத்து புலாவ் செய்ய தெரியும். மூவர்ண கொடியின் வெள்ளை நிறத்திற்கு தேங்காய் புலாவை எடுத்துக் கொள்ளலாம்.


காவி நிறத்திற்கு பிரியாணி-தமிழ்நாட்டில் வெஜ் பிரியாணியை பிரிஞ்சி என்று சொல்வது வழக்கம். தேசத்தின் மூவர்ண கொடியில் உள்ள மூன்றாவது நிறமான காவி நிறத்திற்கு ஏற்றார் போல வெஜ் பிரியாணியில் சிறிது கேசரி பவுடரை அதிகமாக தூவலாம். 


இவை அனைத்தையும் ஒரு தட்டில் போட்டு மூன்று வர்ணங்களையும் அழகாக அடுக்கினால், சுதந்திர தின உணவு தயார். 


மேலும் படிக்க | இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது தெரியுமா?


மூவர்ணத்தில் இட்லியா..? 


இட்லியை தோசை போல ஊற்றி பார்த்திருப்போம் ஆனால் அதை மூன்று வர்ணங்களில் பார்த்ததுண்டா? இட்லி என்றால் எப்போதும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஹேல்தியான முறையில் மூன்று வர்ணங்களிலும் இட்லியை தயாரிக்கலாம். 


கேரட்-காவி நிறம்: கேரட்டை சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து இதனுடன் உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு இட்லி மாவை எடுத்து இதனுடன் மிக்ஸ் செய்யுங்கள். 


இட்லி மாவு-வெள்ளை நிறம்: வழக்கமாக அரிசியில் அரைக்கும் இட்லி மாவை அரைத்து, வெள்ளை நிறத்திற்காக எடுத்துக்கொள்ளலாம். 


பாலக்கீரை-பச்சை நிறம்: இட்லியை பச்சை நிறத்தை வரவைக்க பாலக்கீரையை அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். 


கேரட் அரைவையை இட்லி தட்டில் ஊற்றி வேக வையுங்கள். அது வெந்த பிறகு 5 நிமிடம் கழித்து இட்லி மாவை ஊற்றி வேகவிடுங்கள். பின்னர், 5 நிமிடம் கழித்து பச்சை நிற மாவை ஊற்றி வேகவிடுங்கள். முழுமையாக வெந்த பிறகு இட்லி தட்டை வெளியில் எடுத்தால், மூவர்ணத்தில் சுவையான மற்றும் ஹெல்தியான இட்லி தயார். 


மூவர்ண சாண்ட்விச்: 


கல்லிலே கலை வண்ணம் காண்பது போல, சாண்ட்விச்சிலும் நமக்கு ஏற்றார் போல கலைவண்ணம் காணலாம். அதற்கு முதலில் பிரெட் துண்டுகளை எடுத்துக் அதில் உள்ள நான்கு முனைகளை வெட்டிக்கொள்ளுங்கள். 


பச்சை நிறத்திற்கு..


முதல் ப்ரெட் துண்டில் கிரீன் சட்னியை தடவிக்கொள்ளுங்கள். அது, புதினா அல்லது பசலைக் கீரையைக் கொண்டு உருவாக்கப்பட்ட சட்னியாக இருக்கலாம். அதற்கு மேல் லீட்டஸ் எனப்படும் கீரை வகையை. இவற்றிற்கு மேல், சீஸ் ஷீட்டை வைத்து மேலே மிளகுத் தூளை தூவுங்கள்.


காவி நிறத்திற்கு..


சீஸ் ஷீட்டின் மேல் இன்னொரு பிரெட் துண்டை வைத்து அதற்கு மேல் மையோனீசை தடவிக்கொள்ளுங்கள். இவற்றிற்கு மேல் கேரட் துருவல்களை தூவவும். இவற்றுடன் சிறிதளவு உப்பு மற்றும் மிளகுத் தூளை தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம். 


வெள்ளை நிறத்திற்கு…


கேரட் துருவல்களின் மேல் இன்னொரு பிரெட் துண்டை வைத்தால் வெள்ளை நிறம் ரெடி. இப்போது இந்த சாண்ட் விச்சை இரண்டாக வெட்டி ருசி பார்க்கலாம். தேவை என்றால் சாஸ் உபயோகித்து கொள்ளலாம். 


மேலும் படிக்க | Independence Day 2023 LIVE Updates: 10வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ