Independence Day 2023 LIVE Updates: 2047 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சியை நோக்கி இந்தியா பயணம் செய்கிறது - மோடி

Independence Day 2023: நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 15, 2023, 09:32 AM IST
Live Blog

77வது சுதந்திர தினம் 2023: இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் சுதந்திர தின கொண்டாட்டம் நேற்று முதலே களைகட்ட தொடங்கியுள்ளது. இன்று சுதந்திர தின விழா நடைபெறும் டெல்லி செங்கோட்டையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

15 August, 2023

  • 09:21 AM

    பிரதமர் மோடி தனது 10வது சுதந்திர தின உரையில் நாட்டு மக்களை ‘parivarjan’ என்று அழைத்தார்.

  • 09:21 AM

    நடப்பாண்டு பல்வேறு துறைகளை சார்ந்த 55,000 பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம் - முதல்வர் அறிவிப்பு

  • 09:20 AM

    சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவிற்கு அருகில் உள்ள 6.9 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் - முதல்வர் அறிவிப்பு

  • 09:20 AM

    மகளிர்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டம் இனி "விடியல் பயணம்" என்று பெயர் சூட்டப்படுகிறது - முதலமைச்சர் மு க ஸ்டாலின்

  • 09:12 AM

    மூன்றாவது முறையாக கோட்டையில் கொடி ஏற்றினார் முதலமைச்சர்
    மூன்றாவது முறையாக கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார். 

  • 09:07 AM

    மக்கள் நம்பிக்கையை காப்பாற்றி மாற்றங்களை கொண்டு வந்தோம்
    சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் இதுவே நமது தாரக மந்திரம். 2014, 2019ஆம் ஆண்டு பெரும்பான்மை கொண்ட அரசை மக்கள் தேர்வு செய்தனர். பெரும்பான்மை அரசால்தான் சீர்திருத்தங்களை செய்ய முடியும்: பிரதமர் மோடி

  • 09:07 AM

    சுதந்திரப் போராட்ட வீரர்கள் கனவு கண்ட தேசத்தை, அடுத்த தலைமுறைக்கு சிறந்த வளமான தேசத்தைக் கொடுக்கும் பெரிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது: பிரதமர் மோடி

  • 08:55 AM

    ஊழலை தடுக்கும் முனைப்புடன் அரசு

    10 கோடி போலி நலத் திட்ட பயனாளிகளை எங்களது அரசு களையெடுத்தது. முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் பறிமுதல் 20 மடங்கு அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி

     

  • 08:49 AM

    ஊழலுக்கு எதிரான போராட்டம்

    ஊழல் இந்தியாவின் திறனை மோசமாக பாதித்துள்ளது. ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவது எங்கள் வாழ்நாள் உறுதி: பிரதமர் மோடி

  • 08:42 AM

    இது புதிய பாரதம், தன்னம்பிக்கை நிறைந்த பாரதம்

    "புதிய நாடாளுமன்றக் கட்டிடம் வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக விவாதம் நடந்து வருகிறது. புதிய நாடாளுமன்ற வளாகத்தை காலத்திற்கு முன்பே கட்டி முடிக்க வேண்டும் என்று நாங்கள் உறுதி புண்டோம். இது புதிய பாரதம். இது தன்னம்பிக்கை நிறைந்த பாரதம்." பிரதமர் மோடி 

  • 08:37 AM

    உலக பொருளாதாரத்தில் நாடு முதலிடத்தில் இருக்கும்

    "வறுமை குறையும் போது, நடுத்தர வர்க்கத்தின் பலம் அதிகரிக்கிறது. வரும் ஐந்தாண்டுகளில் உலகின் பொருளாதாரத்தில் நாடு முதலிடத்தில் இருக்கும் - இது மோடி உத்தரவாதம். வறுமையில் இருந்து வெளியே வந்த 13.5 கோடி மக்கள்தான் நடுத்தர வர்க்கத்தின் பலம்" பிரதமர் மோடி.

  • 08:28 AM

    அனைத்திலும் நாம் முன்னேறி வருகிறோம்: பிரதமர் மோடி 

    "இந்தியாவின் திறன் விண்வெளி தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆழ்கடல் பணி, ரயில்வேயின் நவீனமயமாக்கல் - வந்தே பாரத், புல்லட் ரயில் - அனைத்திலும் நாம் முன்னேறி வருகிறோம். இணையம் கிராமத்தை எட்டியுள்ளது. நாம் இயற்கை விவசாயத்திலும் கவனம் செலுத்துகிறோம்." பிரதமர் மோடி 

  • 08:21 AM

    பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

    "நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் திறனுக்காக நான் நன்றி கூற விரும்புகிறேன். விவசாயத் துறையில் இந்தியா முன்னேறி வருவதற்கு விவசாயிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியா முன்னேறி வருகிறது. அதற்காக தொழிலாளர்களின் பங்களிப்புக்காக நான் நன்றி கூற விரும்புகிறேன்." என்று செங்கோட்டையில் பிரதமர் மோடி.

  • 08:16 AM

    அடுத்த மாதம் விஸ்வகர்மா யோஜனா

    அடுத்த மாதம் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தொடங்கப்போவதாக செங்கோட்டையில் பிரதமர் மோடி அறிவித்தார். விஸ்வகர்மா திட்டத்தில் 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம் என அவர் மேலும் கூறினார்.

  • 08:09 AM

    5வது பெரிய பொருளாதாரம்: பிரதமர் பெருமிதம்

    'எங்கள் அரசு பொறுப்பேற்கும் போது, ஊழல் ஒரு அரக்கனாக இருந்தது. லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்கள் இருந்தன. இந்தியா இப்போது 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது' பிரதமர் பெருமிதம்

  • 08:07 AM

    உறுதியற்ற காலத்திலிருந்து இந்தியா விடுபட்டுள்ளது: பிரதமர் மோடி

    2014ல், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல, நிலையான மற்றும் வலுவான அரசு தேவை என்று மக்கள் முடிவு செய்தனர். உறுதியற்ற காலத்திலிருந்து இந்தியா விடுபட்டுள்ளது: பிரதமர் மோடி.

  • 07:58 AM

    "நாட்டில் வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. முடிவில்லாத வாய்ப்புகளை வழங்கும் திறன் நாட்டிற்கு உண்டு.."

     

  • 07:53 AM

    1000 ஆண்டுகளில் நாட்டின் பொன்னான வரலாற்றை முளைக்கும்
    அடுத்த கடந்த 1000 ஆண்டுகளைப் பற்றி பேசுய பிரதமர் மோடி, நாட்டின் முன் உரையாட மீண்டும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது, எனவே நாம் எடுக்கும் நடவடிக்கைகளும், நாம் எடுக்கும் முடிவுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரும் 1000 ஆண்டுகளில் நாட்டின் பொன்னான வரலாற்றை முளைக்கும்.

  • 07:53 AM

    மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை ஆகிய மும்மூர்த்திகளுக்கு தேசத்தின் கனவுகளை நனவாக்கும் சக்தி உள்ளது: பிரதமர் மோடி

  • 07:49 AM

    மணிப்பூரில் அமைதி நிலவ பிரதமர் மோடி வேண்டுகோள்
    77வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் இருந்து மணிப்பூரில் அமைதி நிலவ பிரதமர் மோடி வேண்டுகோள்

    "மணிப்பூர் மக்களுடன் நாடு நிற்கிறது...அமைதியின் மூலமே தீர்வு காண முடியும். மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன."

  • 07:48 AM

    உலக அரங்கில் இந்தியாவின் பங்கு

    உலகம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. தொழில்நுட்பத்தில் அதன் திறமையால் இந்தியா உலக அரங்கில் புதிய பங்கையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்: பிரதமர் மோடி

  • 07:46 AM

    குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள்
    இந்த முறை, இயற்கை பேரிடர் நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இதை எதிர்கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்...."

  • 07:36 AM

    பிரதமர் மோடி உரை
    உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் இப்போது இந்தியா முன்னணி நாடாகவும் உள்ளது.

  • 07:18 AM

    77வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றிய பின் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.

     

  • 07:12 AM

    தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

    இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றினார்.

  • 07:12 AM

    பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: நேரலையில் எங்கு பார்ப்பது?
    வீட்டில் இருந்தபடியே பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையை நாம் (PM Narendra Modi Live speech on 77th Independence Day of India) நேரலையில் காணலாம்.

  • 07:03 AM

    பிரதமர் மோடியின் உரையின் சாதனை
    பிரதமர் மோடி 9 முறையில் ஒரு முறை மட்டுமே ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக நாட்டிற்கு உரையாற்றியுள்ளார். 2017 சுதந்திர தினத்தில் பிரதமரின் உரை 56 நிமிடங்கள் பதிவானது. இதுவே அவரது குறுகிய உரையாகும். 2015ல் பிரதமர் மோடி 86 நிமிட உரை அளித்து பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை முறியடித்தார். இதற்குப் பிறகு, பிரதமர் மோடி 2020 இல் செங்கோட்டையில் 86 நிமிடங்கள், 2021 இல் 88 நிமிடங்கள் மற்றும் 2022 இல் 83 நிமிடங்கள் உரையாற்றினார்.

  • 07:01 AM

    77வது சுதந்திர தினம்: மதுரை மாணவர்களின் நடன நிகழ்ச்சி

    மதுரை: சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவர்களின் கோலாகல நடன நிகழ்ச்சி.

  • 06:48 AM

    ராஜ்காட்டில் பிரதமர் மோடி

    77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ராஜ்காட்டில் தேச தந்தை மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

  • 06:43 AM

    களைகட்டும் சுதந்திர தின விழா

    சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசியக் கொடியை ஏற்றினார்.

  • 06:25 AM

    பிரதமர் மோடி வாழ்த்து
    சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    “சுதந்திர தின வாழ்த்துகள். நமது மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நாம் மரியாதை செலுத்துவதுடன், அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஜெய் ஹிந்த்!”

  • 06:21 AM

    பிரதமர் உரையில் முக்கிய அறிவிப்புகள்?

    இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றவுள்ளார். அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக பிரதமர் மோடி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • 06:19 AM

    77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு கூகுள் டூடுல்
    கூகுள் டூடுல் இந்திய ஜவுளி கலை வடிவத்தை காட்சிப்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாடியது.

    பல்வேறு டெக்ஸ்டைல் பிரிண்ட்கள் பற்றிய விவரங்கள் பின்வருமாறு: 




    No. Textile Technique/Craft Region
    1 Kutch Embroidery Gujarat
    2 Pattu Weave Himachal Pradesh
    3 Jamdani Weave West Bengal
    4 Kunbi Weave Textile Goa
    5 Fine Ikat Odisha
    6 Pashmina Kani Woven Textile Jammu and Kashmir
    7 Benarasi Weave Uttar Pradesh
    8 Paithani Weave Maharashtra
    9 Kantha Embroidery West Bengal
    10 Naga Woven Textile Nagaland
    11 Ajrakh Block Printing Kutch, Gujarat
    12 Apatani Weave Arunachal Pradesh
    13 Phulkari Weave Punjab
    14 Leheriya Resist Dyed Textile Rajasthan
    15 Kanjeevaram Tamil Nadu
    16 Sujni Weave Bihar
    17 Bandhani Resist Dyed Gujarat, Rajasthan
    18 Kasavu Weave Textile Kerala
    19 Ilkal Handloom Karnataka
    20 Mekhela Chador Weave Assam
    21 Kalamkari Block Print Andhra Pradesh
  • 05:58 AM

    சுதந்திர தின உரையில் குடியரசு தலைவர் கோரிக்கை
    77வது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியுள்ளார்.

  • 05:56 AM

    சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்பு
    பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 7.30 மணி அளவில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி உரையாற்ற உள்ளார். இதில் மூத்த அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர், மேலும் விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த 1,800 சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்கின்றனர்.

  • 05:55 AM

    அன்றைய போராட்டம்... இன்றைய கொண்டாட்டம்

    இன்று இந்திய குடிமக்களாகிய நாம் எந்த வித சலனமும் அச்சமுமின்றி சுதந்திரமாய் வாழ்க்கையை நடத்துகிறோம். ஆனால், அந்த சுதந்திரம் நமக்கு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். பலரது நாட்டுப்பற்று, விடா முயற்சி, சகிப்புத்தன்மை, தியாகம் ஆகியவை நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரத்தின் அடித்தளமாக இருக்கின்றன. பலர் தங்கள் வாழ்க்கை முழுவதையும் சுதந்திர போராட்டத்திற்காக அர்ப்பணித்தனர். இதோ நாம் சுதந்திரம் பெற்ற வரலாற்றின் சாராம்சம்.

  • 05:54 AM

    144 தடை உத்தரவு
    பட்டங்கள், பலூன்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன்களை கண்டறியும் அதிநவீன ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. செங்கோட்டை வளாகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

     

  • 05:50 AM

    77-வது சுதந்திர தின விழா
    நாட்டின் 77-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும் மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களும் தேசிய கொடி ஏற்ற உள்ளனர்.

Trending News