இந்தியாவில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது...!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகம் முழுவதும் தீவிரமாக பரவிவரும், கொடிய வைரஸ் நோய்க்கான தடுப்பூசி இல்லாத நிலையில், 2021 பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் ஒரு நாளைக்கு 2.87 லட்சம் கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்யக்கூடும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (MIT) ஆராய்ச்சியாளர்கள் குழு கூறியுள்ளது.


மசாசேசூட்ஸ் பல்கலைக்கழகம் இந்தியா உள்ளிட்ட அதிக மக்கள் தொகை நிறைந்த 84 நாடுகளில் உலக மக்கள் தொகையில் 60 சதவிகிதம் (475 கோடி மக்கள் ) பேரிடம் நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. இந்த ஆய்வில் சீனா சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. மசாசேசூட்ஸ் பல்கலைக்கழகத்தின் ‘ஸ்லோன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் ஆராய்ச்சியாளர்கள் ஹஷீர் ரஹ்மந்தாத், டி.ஒய் லிம் மற்றும் ஜான் ஸ்டெர்மன் ஆகிய நோய்த்தொற்று ஆராய்ச்சியாளர்கள் செய்த ஆய்வில் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் உலக மக்கள் தொகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 முதல் 60 கோடிக்குள் இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.


READ | COVID-19 காற்றின் மூலம் பரவுகிறது என்பதற்கான ஆதாரம் பெருகி வருகிறது: WHO


இந்த சமயத்தில் இந்தியாவில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 2.87 லட்சம் பேரை கொரோனா தொற்று தாக்கும். அமெரிக்காவில் 95,000 பேரும் தென் ஆப்ரிக்காவில் 21,000 பேரும் ஈரானில் 17,000 பேரும் இந்தோனேஷியாவில் 13,000 பேருக்கும் நாள் ஒன்றுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவார்கள். இந்த காலக்கட்டத்தில் உலகிலேயே அதிகமாக பாதிக்கப்படும் நாடாக இந்தியா இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 


மேலும் ஜூன் 18 ஆம் தேதியன்று உலக அளவில் கொரோனா பாதிப்பு 8.85 கோடியாகவும் கொரோனா மரணங்கள் 6 லட்சமாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு உலக நாடுகளில் 11.8 கோடியாக இருக்கிறது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.