சுற்றுலா செல்ல பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன... அந்த வகையில், ஜூன் மாதத்தின் கடைசி நாட்களில் செல்லக் கூடிய சில இடங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். ஜூன் மாதம் பல இடங்களில் மழை பெய்யத் தொடங்குகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் சில இடங்களின் அழகு மழை காலத்தில் பெரிய அளவில் அதிகரிக்கிறது. இந்த நேரத்தில், நீங்கள் சில சிறந்த இடங்களை தேர்ந்தெடுத்து செல்ல திட்டமிடலாம். இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் இந்த இடங்களை ஒருமுறை சென்று பார்த்தால், மீண்டும் மீண்டும் இந்த இடத்திற்கு வராத் தூண்டும் என்றால் மிகையில்லை. ஜூன் மாதத்தின் கடைசி நாட்களில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிக்மகளூர்


கர்நாடகாவில் உள்ள சிக்மகளூர் தென்னிந்தியாவில் ஜூன் மாதத்தில் பார்க்க சிறந்த இடங்களில் ஒன்றாகும். ஹெப்பி மற்றும் ஹனுமான் குண்ட் நீர்வீழ்ச்சிகள் இங்கு மிகவும் பிரபலமானவை. நீங்கள் நீர்வீழ்ச்சிகளை ரசிக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக இங்கே மன மகிழ்ச்சியை பெறலாம். பத்ரா அணை, ஹனுமான குண்ட் நீர்வீழ்ச்சி, மடு குண்ட் நீர்வீழ்ச்சி, ஹிரேகொலாலே ஏரி, காபி அருங்காட்சியகம் மற்றும் வீர நாராயண் கோயில் ஆகியவை இங்கு பார்க்க சிறந்த இடங்கள்.


வயநாடு


வயநாடு கேரளாவில் உள்ள பசுமை அழகினால் சூழப்பட்ட நகரம். நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம் (India Tourism) இது. இங்கு மீன்முட்டி நீர்வீழ்ச்சி, செம்பர சிகரம், திருநெல்லி கோயில் மற்றும் கந்தன்பாறை நீர்வீழ்ச்சி ஆகியவற்றைக் காண மறக்காதீர்கள்.


கூர்க்


இந்தியாவில் ஜூன் மாதத்தில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலில் கர்நாடகாவில் உள்ள கூர்க், மிக முக்கியமானது. அமைதியை விரும்பும் நபர்களுக்கு ஏற்ற குடும்ப சுற்றுலா தலமான இந்த இடம் 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்று குறிப்பிடப்படுகிறது. காபி பிரியர்களுக்கு சொர்க்கமாகவும் விளங்கும் இங்கு இயற்கை ஆர்வலர்கள், சாகச பிரியர்களுக்கான நிறைய இடங்கள் உள்ளன. சூரிய அஸ்தமனமும், இரவில் வான் பரப்பில் நிகழும் மாயாஜாலங்களும் மனதை கொள்ளை கொள்ளும். 


மேலும் படிக்க | மதுரை டூ பத்ரி - கேதார்நாத்... IRCTC வழங்கும் பாரத் கவுரவ் யாத்திரை பேக்கேஜ்..!!


ஷில்லாங்


'கிழக்கு இந்தியாவின் ஸ்காட்லாந்து' என்றும் அழைக்கப்படும் ஷில்லாங், மேகாலயா மாநிலத்தின் சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. பசுமையான மலைகள், அமைதியான ஏரிகள், மிரள வைக்கும் நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அதிசயங்கள் நிரம்பப் பெற்றது. உமியம் ஏரி, அடர்ந்த மலைகள், மூன்று அடுக்கு யானை நீர்வீழ்ச்சி, அடர்ந்த வனம் என இயற்கை நிலப்பரப்புகளால் சூழப்பட்டுள்ளது. மேகாலயாவைப் பற்றி மேலும் அறிய டான் போஸ்கோ அருங்காட்சியகத்தை பார்வையிடலாம். அங்கு பாரம்பரிய உடைகள், பழங்கால ஆயுதங்கள் மற்றும் கலைப்பொருட்களை காணலாம்.


கசௌலி


கசௌலி அனைத்து வயதினரும் விரும்பும் சிறந்த இடமாகும். இது வரலாற்று இடங்களை பார்வையிட விரும்பும் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. கசௌலியில் கோர்க்கா கோட்டை, கிருஷ்ண பவன் கோயில், கிறிஸ்ட் சர்ச் மற்றும் மன்கி பாயின்ட் ஆகியவை பார்க்க சிறந்த இடங்கள்.


பாலம்பூர்


இந்த இடம் 'வடமேற்கு இந்தியாவின் தேயிலை தலைநகரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடம் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. இங்கே நீங்கள் நியூகல் காட், சவுரப் பான் விஹார் மற்றும் தேயிலை தோட்டம் ஆகியவற்றைக் காணலாம். அமைதியான வகையில் விடுமுறையை கழிக்க இந்த இடம் சிறந்தது.


மலானா


ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மலானா என்ற சிறிய கிராமம், அதன் தனித்துவமான கலாச்சாரம் காரணமாக சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானது. இமயமலையால் சூழப்பட்ட இந்த அமைதியான மலை நகரம் ஜூன் மாதத்தில் இந்தியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மலானாவில் பார்க்க வேண்டிய இடங்கள் கீர்கங்கா, மணிகரன் மற்றும் தோஷ் ஆகியவை.


மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ