இந்தியன் ரயில்வே: உங்கள் Waiting List டிக்கெட் உறுதி செய்யப்படுமா? இந்த Code முக்கியம்
Confirm Train Ticket: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு உறுதியான டிக்கெட் கிடைக்காவிட்டால், ரயில்வே காத்திருப்பு டிக்கெட்டுகளை வழங்குகிறது. எத்தனை வகையான காத்திருப்பு பட்டியல் (Waiting List) உள்ளன என்பது குறித்து பார்ப்போம்.
Indian Railways: கோடை கால விடுமுறை நாட்களில் ரயிலில் வழக்கத்தை விட மிக அதிகமாக பயணிகள் கூட்டம் இருக்கும். அந்த கூட்ட நெரிச்சலை கட்டுப்படுத்த, இந்திய ரயில்வே பல சிறப்பு ரயில்கள் பலத்தடங்களில் இயக்கப்படுகின்றன. ஏசி முதல் ஸ்லீப்பர் கோச் வரை முன்பதிவு செய்து டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டவருக்கு இருக்கை கிடைக்கும். அதே நேரத்தில் காத்திருப்பு டிக்கெட் வைத்திருப்பவர்களும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். அதற்கு காரணம் முன்பதிவு செய்யும் போது உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்காவிட்டால், காத்திருப்பு டிக்கெட்டுக்கள் வழங்கப்படும். ஒருவேளை எந்த பயணியாவது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை ரத்து செய்தால், அவரது இருக்கை காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிக்கு வழங்கப்படும். ஆனால் காத்திருப்பு பட்டியலில் உள்ள டிக்கெட் உறுதி செய்யப்படுமா? என்றால், அதற்கு நீங்கள் முதலில் காத்திருப்பு பட்டியல் என்றால் என்ன? எத்தனை வகையான காத்திருப்பு பட்டியல்கள் உள்ளன? எந்த காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன? என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்திய ரயில்வே பல வகையான காத்திருப்பு டிக்கெட்டுகளை வழங்குகிறது. பல பயணிகளுக்கு இது தெரியாது. காத்திருப்பு டிக்கெட்டை கவனமாகப் பார்த்தால், GNWL, RLWL, PQWL, RLGN, RSWL என இந்தக் குறியீடுகளில் ஒன்று அதில் எழுதப்பட்டிருக்கும். இந்த குறியீட்டின் மூலம் உங்கள் டிக்கெட் எந்த காத்திருப்பு பட்டியலில் உள்ளது. அது உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்பு என்ன என்பதை பார்ப்போம்.
GNWL என்பது பொதுக் காத்திருப்புப் பட்டியலைக் குறிக்கிறது. காத்திருப்பு டிக்கெட்டின் போது இது வழங்கப்படுகிறது. எந்த ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறதோ அங்கிருந்து நீங்கள் டிக்கெட் வாங்கும் செய்யும் போது இது கிடைக்கும். உதாரணமாக, நீங்கள் டெல்லியிலிருந்து சென்னைக்கு பயணம் செய்யும் போது, டெல்லியிலிருந்து டிக்கெட் வாங்கினால், இந்த டிக்கெட்டைப் பெறுவீர்கள். அதேநேரத்தில் நீங்கள் காஜியாபாத்தில் இருந்து உங்கள் பயணத்தைத் தொடங்கினால், இந்த டிக்கெட் உங்களுக்கு கிடைக்காது. இது இந்திய ரயில்வேயின் பொதுவான காத்திருப்பு பட்டியல். இதில் டிக்கெட் உறுதிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். இதில் விரைவில் டிக்கெட் உறுதி செய்யப்படுகிறது.
RLWL என்பதன் முழு அர்த்தம் ரிமோட் லொகேஷன் வெயிட்டிங் லிஸ்ட். இந்த பட்டியலில் ரயில் புறப்படும் நிலையம் மற்றும் கடைசியாக சேருமிட நிலையத்திற்கு இடையே டிக்கெட் எடுத்தால் வழங்கப்படும். உதாரணமாக, ஒருவர் டெல்லியிலிருந்து சென்னைக்குப் பயணிக்க ஆக்ராவிலிருந்து டிக்கெட் எடுத்தால், அவருக்கு RLWL வழங்கப்படும். GNWL உடன் ஒப்பிடும்போது இந்த டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. பயணத்தின் நடுவில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் ரத்து செய்யப்பட்டால், இந்த டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
PQWL என்பது பூல் செய்யப்பட்ட காத்திருப்புப் பட்டியல். இதன் அர்த்தம் ரயில் வழித்தடங்களுக்கு இடையே ஸ்டேஷனில் இருந்து காத்திருப்பு டிக்கெட் எடுக்கும்போது இது கிடைக்கும். அதாவது பயணிகள் ரயிலின் தொடக்க மற்றும் இறுதி ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏதேனும் நிலையத்திலிருந்து பயணம் செய்தால், அவர் இந்த டிக்கெட்டைப் பெறுவார். இந்த டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
TQWL என்பது தட்கல் கோட்டா காத்திருப்புப் பட்டியல் ஆகும். இங்கு டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஒரு பயணி தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்து, டிக்கெட் உறுதிப்படுத்தல் பெறாதபோது இந்த டிக்கெட் வழங்கப்படுகிறது. உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை ஒரு பயணி ரத்து செய்யும் போது இந்த டிக்கெட் உறுதி செய்யப்படுகிறது.
இந்த டிக்கெட்டுகளைத் தவிர, இந்திய ரயில்வே RLGN மற்றும் RSWL டிக்கெட்டுகளையும் வழங்குகிறது. இதுவும் ஒருவகை காத்திருப்பு டிக்கெட்தான். இந்த டிக்கெட்டுகள் சிறப்பு அர்த்தத்துடன் வழங்கப்படுகின்றன.
மேலும் படிக்க - அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ