Indian Railways: ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி, இனி இந்த வசதியும் கிடைக்கும்
இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல வித நன்மைகளையும் வசதிகளையும் அவ்வப்போது அளித்து வருகிறது.
இந்திய ரயில்வே: ரயில்வே பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி. இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல வித நன்மைகளையும் வசதிகளையும் அவ்வப்போது அளித்து வருகிறது.
ரயில் பயணத்தின் போது உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு இந்திய ரயில்வே https://zeenews.india.com/tamil/lifestyle/indian-railway-shock-for-passengers-rail-fair-concession-for-senior-citizens-refused-by-minister-385832சிறப்பு வசதிகளை செய்து வருகிறது. பயணத்தின் போது மக்களுக்கு நவராத்திரி சிறப்பு விரத உணவுகளை வழங்க இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் முடிவு செய்துள்ளது. அதாவது, இப்போது நீங்கள் உங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து உங்கள் இருக்கையில் அவற்றை பெறலாம்.
ஐஆர்சிடிசி மிகப்பெரிய வசதியை வழங்குகிறது
வட இந்தியாவில் கோடை காலத்திலும் ஒரு நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. ஐஆர்சிடிசி படி, ஏப்ரல் 2 முதல் தொடங்கும் நவராத்திரி நேரத்தில், பயணத்தின் போது, பயணிகளுக்கு விரத்தத்துக்கான உணவு அதாவது பழங்கள் வழங்கப்படும். பயணிகள் தங்களுக்கு விருப்பமான உணவை இ-கேட்டரிங் மூலம் ஆர்டர் செய்து அல்லது 1323 -ல் புக் செய்து தங்கள் இருக்கைகளில் உணவை பெறலாம். தங்கள் வசதிக்கேற்ப முன்பதிவு செய்து கொள்ளலாம்
விரத நாட்களுக்கான இந்த உணவு பூண்டு-வெங்காயம் இல்லாமல் இந்த உணவு தூய்மையாகவும் சாத்வீகமாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி விரதத்திற்கு ஏற்ப கல் உப்பு சமையலில் பயன்படுத்தப்படும் என்று ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ரயில்வேயின் கோடைகால சிறப்பு திட்டம் - 3 நாட்களுக்கு முன்பே தொடக்கம்
உணவில் என்ன கிடைக்கும்?
ஐஆர்சிடிசி மக்களின் விருப்பங்களைக் கருத்தில் கொண்டு மெனுவைத் தயாரித்துள்ளது. இதன் கீழ் நான்கு விதமான உணவுத் தொகுப்புகள் கிடைக்கும். அவற்றின் விலை 125 முதல் 200 ரூபாய் வரை இருக்கக்கூடும். ஐஆர்சிடிசி தனது கட்டணத்தை இன்று இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.
IRCTC கேட்டரிங் வசதியை வழங்கும் சுமார் 500 ரயில்களில் இந்த சிறந்த வசதி கிடைக்கும். விரத உணவு ரயில்களில் மட்டுமே கிடைக்கும். ரயில் நிலையங்களில் உள்ள IRCTC ஸ்டால்களில் இவை கிடைக்காது.
இந்த உணவுகள் மெனுவில் இருக்கக்கூடும்:
- காய்கறி கொண்டு செய்யப்பட்ட பகோடா
- பூரி சப்ஜி
- ஜெவ்வரிசி உப்புமா
- லஸ்ஸி
- பழச்சாறு (அதில் உப்பு, சர்க்கரை இருக்காது),
- பழங்கள், தேநீர், ரப்ரி,
- உலர் பழங்கள் பாயசம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR