ஐஆர்சிடிசி-யுடன் ஆதார் இணைப்பு: ரயில்வே பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தி. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் (IRCTC) டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு தற்போது விதிகள் மாற்றப்பட்டுள்ளன.
புதிய விதிகளின்படி, முன்பை விட இப்போது ஒரு மாதத்தில் அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசி உடன் உங்கள் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம் நீங்கள் இந்த பலன்களைப் பெறலாம். புதிய விதி பற்றி தெரிந்து கொள்வோம்.
தற்போது டிக்கெட் முன்பதிவு விதிகள் மாற்றப்பட்டுள்ளன
இதுவரை ஐஆர்சிடிசி கணக்கிலிருந்து ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என இருந்தது. ஆனால் இப்போது உங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பதன் மூலம் ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளுக்குப் பதிலாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதாரை இணைப்பது மிக எளிதான செயல்முறையாகும். இதை எவ்வாறு செய்வது என இங்கே காணலாம்.
மேலும் படிக்க | பயணிகளுக்கு ஷாக் கொடுத்த இந்தியன் ரயில்வே: கட்டண சலுகை பற்றிய பெரிய அப்டேட்
மேலும் படிக்க | LPG Subsidy: கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து அரசின் புதிய திட்டம் என்ன?
ஆதாரை இணைப்பது எப்படி
1. இதற்கு, முதலில் ஐஆர்சிடிசி இன் அதிகாரப்பூர்வ இ-டிக்கெட் இணையதளமான irctc.co.in க்குச் செல்லவும்.
2. இப்போது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
3. இப்போது ஹோம் பேஜில் தோன்றும் 'மை அகவுண்ட் பகுதிக்கு’ சென்று 'ஆதார் கெஒய்சி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
4. இதற்குப் பிறகு அடுத்த பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு 'செண்ட் ஓடிபி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
5. இப்போது உங்கள் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி வரும். இந்த ஓடிபி ஐ உள்ளிட்டு சரிபார்ப்பைச் செய்யவும்.
6. ஆதார் தொடர்பான தகவல்களைப் பார்த்த பிறகு, கீழே எழுதப்பட்ட 'வெரிஃபை’ என்பதைக் கிளிக் செய்யவும்.
7. இதற்குப் பிறகு KYC விவரங்கள் வெற்றிகரமாக புதுப்பிக்கப்பட்டதாக உங்கள் மொபைலில் ஒரு செய்தி வரும்.
ப்ரொஃபைல் ஆதாருடன் சரிபார்க்கப்பட வேண்டும்
டிக்கெட்-டை முன்பதிவு செய்ய, ஒரு பயணி தனது ப்ரொஃபைலை ஆதாருடன் சரிபார்க்க வேண்டியது மிகவும் முக்கியம். இது முதன்மை பட்டியலின் கீழ் 'மை ப்ரொஃபைல்’ டேபில் கொடுக்கப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், பயணிகளின் பெயர் மற்றும் ஆதார் அட்டை விவரங்களை இங்கே கொடுத்து மாஸ்டர் பட்டியலை புதுப்பிக்கவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR