ரயில் சேவைகள்: ரயிலில் கிடைக்கும் வசதிகளிலும், சேவைகளிலும் நீங்கள் ரயில்வே பணியாளரின் அலட்சிய போக்கை பெரும்பாலானோர் அனுபவித்திருக்க வைத்திருக்க கூடும். ஏசி பெட்டிகளில் அழுக்கு போர்வைகள், அழுக்கு பெட்ஷீட்கள் மற்றும் கேட்டரிங்  சேவைகளில் அலட்சியம் ஆகியவை அடிக்கடி காணப்படுகின்றன. இதை சமாளிக்க இந்திய ரயில்வே தீவிர நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் ரயில்வே வாரியம் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளது. ரயில்களை சுத்தம் செய்தல், ஷீட், போர்வைகளை துவைத்தல், உணவு வழங்குதல் போன்ற பணிகளுக்கு இனி டெண்டர் நீண்ட நாட்களுக்கு வழங்கப்படாது என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கான  காலம் குறைந்தபட்சமாக குறைக்கப்பட்டு, காலாவதியான பிறகு புதுப்பிக்கப்படும். இதனால், ஒப்பந்ததாரர்கள் அலட்சியப் போக்கை தவிர்ப்பதுடன், பயணிகளும் சிரமத்திற்கு ஆளாக மாட்டார்கள். ரயில்வே வாரியத்தின் இந்த முடிவு குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரயில்வே வாரியத்தின் முடிவு


ரயிலின் அனைத்து வசதிகள் தொடர்பான டெண்டர் காலத்தை 6 மாதங்களாக குறைக்கப் போவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த டெண்டர்கள் 3 அல்லது 5 ஆண்டுகளுக்கு இருந்தது. கால அவகாசம் முடிந்ததும் ஒப்பந்ததாரர்கள் தனக்கு உள்ள தொடர்புகள் மூலம் மீண்டும் டெண்டர் எடுப்பது வழக்கம். இனி வேலையில் அலட்சியமாக இருந்தால்  டெண்டர் நீட்டிக்கப்படாது. குறுகிய கால டெண்டர் என்றால், ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக இருக்க மாட்டார்கள் என இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கப்படுமா? மக்கள் கோரிக்கை


IRCTC க்கு வழங்கப்பட்ட வழிமுறைகள்


புதிய முடிவு தொடர்பாக அனைத்து மண்டல ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசிக்கு ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. எதிர்காலத்தில், போர்வைகளை துவைப்பது  தொடர்பான டெண்டர் புதிய கொள்கையின் கீழ் செய்யப்படும். அதன் கண்காணிப்பு பிரிவு அளவிலும் மேற்கொள்ளப்படும். பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு புதிய கொள்கை கொண்டு வரப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.


ரயில்வே வாரியம்  அனுப்பியுள்ள கடிதம்


புதிய நடவடிக்கை குறித்து, வடக்கு ரயில்வே, ஐஆர்சிடிசி உள்ளிட்ட அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது. இப்போது ஒப்பந்தம் 6 மாதங்களுக்கு மேல் கொடுக்கப்படாது என்று தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இது தவிர, போர்வை, பெட்ஷீட் சலவைக்கான டெண்டரை மையப்படுத்தவும் ரயில்வே வாரியம் தயாராகி வருகிறது.  ரயில்வே கோட்ட அளவில் இல்லாமல் ரயில்வே வாரியம் மூலம் டெண்டர் எடுப்பது  குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | ஆதார் அட்டையை தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம், உடனே இதை செய்யுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ