கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கப்படுமா? மக்கள் கோரிக்கை

Indian Railways News: கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும் என நாங்குநேரி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 21, 2023, 03:17 PM IST
  • கொரோனாவாழ் நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.
  • அனைத்து ரயில் நிலையங்களிலும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும்.
  • 25க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்ற நிலையில் தற்போது 5 ரயில்கள் மட்டுமே செல்கிறது.
கொரோனாவால் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்கப்படுமா? மக்கள் கோரிக்கை title=

Tamil Nadu News: நெல்லை மாவட்டம் நாங்குநேரி மேலப்பாளையம் ரயில் நிலையங்களுக்கு இடையில் புதியதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதையில் மின் அமைப்புகள் குறித்த ஆய்வு இன்று நடந்தது. இதில் தென்னக ரயில்வே மின்சார பிரிவு தலைமை பொறியாளர் சித்தார்த்தா மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட ரயில்வே மேலாளர் சச்சிந்தர் மோகன்ராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக நாங்குநேரி ரயில் நிலையத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பணிகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாங்குநேரி ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ஆய்வு வாகனத்தில் தொடங்கிய ஆய்வு பணி மேலப்பாளையம் வரை நடந்தது.  இதில் புதிதாக அமைக்கப்பட்ட ரயில்வே தண்டவாளம் மின் பாதை மற்றும் கருவிகள் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணியில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட பல பங்கேற்றனர். 

மேலும் படிக்க: மீண்டும் பீதியை ஏற்படுத்தும் கொரோனா, தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழப்பு

நாங்குநேரி ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளரை நேரில் சந்தித்த பொதுமக்கள் சிலர் கொரோனாவுக்கு முன்பு நாங்குநேரி வழியாக 25க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்ற நிலையில் தற்போது 5 ரயில்கள் மட்டுமே நாங்குநேரியில் நின்று செல்கிறது. பெரும்பாலான ரயில்கள் நிறுத்தப்பட்டு விட்டன. எனவே நிறுத்தப்பட்ட அனைத்து ரயில்களையும் மீண்டும் இயக்கவும் நாங்குநேரி ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் கேரள எல்லையில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் அனைத்து ரயில்களும் என்று செல்லும் நிலையில் தமிழக எல்லைப் பகுதியில் பாரபட்சம் காட்டப்படுகிறது என கூறி கோட்ட மேலாளரிடம் மனு அளித்தனர். இதனை அடுத்து நாங்குநேரியில் ரயில்களை நிறுத்த உரிய நடவடிக்கை எடுப்படும் என  கோட்ட மேலாளர் உறுதி அளித்தார்.

மேலும் படிக்க: மனைவிக்காக 15 லட்ச ரூபாய் மதிப்பில் கோயில் கட்டி வரும் கணவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News