ஐஆர்சிடிசி புதிய டூர் பேக்கேஜ்: ஐஆர்சிடிசி தென்னிந்திய சுற்றுப்பயணம்: நீங்கள் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதில் விருப்பமுள்ளவராகவும், அத்தகைய சுற்றுப்பயணங்களைத் தேடுபவர்களாகவும் இருந்தால், நாங்கள் உங்களுக்கு ஒரு நல்ல டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளோம், ஒருவேளை இந்த சுற்றுப்பயணம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், இந்த முறை IRCTC தென்னிந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள புதிய டூர் பேக்கேஜ் ஒன்றை கொண்டுவந்துள்ளோம், இது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் சிறப்புவாய்ந்தாக இருக்கும். மேலும் இந்த சுற்றுலா பயணமானது "பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயில்" மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். மேலும் இந்த டூர் "SRI RAMESHWARAM -TIRUPATI DAKSHIN DARSHAN YATRA" என்கிற பெயர் மூலம் இயக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பையில் இருந்து நவம்பர் 17 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது:
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) தென்னிந்தியாவிற்கு பயணம் செய்ய ஒரு சிறப்பு சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது, இந்த சுற்றுப்பயணம் நவம்பர் 17 ஆம் தேதி முதல் தொடங்கும், மேலும் இந்த சுற்றுப்பயணம் 8 இரவுகள் மற்றும் 9 பகல்களுக்கு இருக்கும். இந்த சுற்றுலாப் பேக்கேஜுக்கு முன்பதிவு செய்ய பயணிகள் IRCTC இணையதளமான irctctourism.com ஐப் பார்வையிட்டு அங்கு புக் செய்துக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் மத்திய ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


இந்த இடங்கள் உள்ளடக்கப்படும்:
இந்த சுற்றுப்பயணத்திற்காக, பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லும், ரயில் CSMT (மும்பை) யில் இருந்து புறப்படும், திருப்பதி, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம் வழியாக சென்று மீண்டும் அதே பாதை வழியாக திரும்பும்.


ரயில்வே இந்த நிலையங்களை போர்டிங்/டிபோர்டிங் புள்ளிகளாக மாற்றியது:
ரயில்வே CSMT (மும்பை), தானே, கல்யாண், கர்ஜத், லோனாவாலா, புனே, டவுண்ட், குர்துவாடி, சோலாப்பூர் மற்றும் கலபுர்கி ஆகிய இடங்களை பயணத்திற்கான போர்டிங்/டிபோர்டிங் நிலையங்களாக திட்டமிட்டுள்ளது.


ஒரு நபருக்கு இவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்:
IRCTC இந்த சுற்றுப்பயணத்திற்கு மூன்று வகுப்புகளை நிர்ணயித்துள்ளது, இதில் எகானமியின் கட்டணம், அதாவது ஸ்லீப்பர் வகுப்பு ஒரு நபருக்கு ரூ. 15,550/-, ஸ்மார்ட் வகுப்பின் கட்டணம், அதாவது 3AC கட்டணம் ஒரு நபருக்கு ரூ. 27850/- மற்றும் 2AC இன் கட்டணம் ஒரு நபருக்கு ரூ.33,800/- ஆக தீர்மானித்துள்ளது.



சேருமிடங்கள் மற்றும் வருகைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன:


* திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோயில் மற்றும் பத்மாவதி தாயார் கோவில்
* ராமேஸ்வரம்: இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் மற்றும் தனுஷ்கோடி
* மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
* கன்னியாகுமரி: விவேகானந்தா ராக் மெமோரியல், காந்தி மண்டபம், கன்னியாகுமரி கோவில்
* திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் கோவளம் கடற்கரை


 


மேலும் படிக்க | இந்தியன் ரயில்வே.. புதிய ரூல்ஸ்: இரவு நேர பயண விதிகளில் மாற்றம், இனி இதையெல்லாம் செய்ய முடியாது!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ