மூத்த குடிமக்களுக்கு செம டூர் பேக்கேஜ்.. IRCTC அசத்தல் ஆபருடன் அறிமுகம்

IRCTC Tour Package: IRCTC இன் இந்த பேக்கேஜின் கீழ், அகமதாபாத், ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) , ஜெய்ப்பூர், வைஷ்ணோதேவி மற்றும் அமிர்தசரஸ் போன்ற இடங்களுக்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 25, 2023, 02:16 PM IST
  • இந்த ரயில் பயண தொகுப்பு 12 இரவுகள் மற்றும் 13 பகல்களுக்கானது.
  • இந்த தொகுப்பு கொச்சுவேலியில் இருந்து தொடங்கும்.
  • பேக்கேஜ் விலை ஒரு நபருக்கு ₹26,310 முதல் தொடங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கு செம டூர் பேக்கேஜ்.. IRCTC அசத்தல் ஆபருடன் அறிமுகம் title=

ஐஆர்சிடிசி புதிய டூர் பேக்கேஜ்: இந்திய ரயில்வே (Indian Railway) பல்வேறு இடங்களுக்கு டூர் பேக்கேஜ்களை அவ்வப்போது கொண்டு வருகிறது. அதிலும் மூத்த குடிமக்களுக்கென (Senior Citizens) பல ஆன்மீக டூர் பேக்கேஜுகளை ஐஆர்சிடிசி கொண்டு வருகிறது. அதன்படி அகமதாபாத்தில் இருந்து அமிர்தசரஸ் வரை நீங்கள் பயணிக்கக்கூடிய அத்தகைய சூப்பரான டூர் பேக்கேஜ் பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம். உண்மையில், இந்திய ரயில்வேயின் நிறுவனமான ஐஆர்சிடிசி (Indian Railway Catering and Tourism Corporation) உங்களுக்காக ஒரு மலிவான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது. இந்த பேக்கேஜில் முன்பதிவு செய்தால், பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயிலில் பயணம் (Bharat Gaurav Special Tourist Train) செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

ஐஆர்சிடிசி (IRCTC) இன் இந்த பேக்கேஜின் கீழ், அகமதாபாத், ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) , ஜெய்ப்பூர், வைஷ்ணோதேவி (Vaishno Devi) மற்றும் அமிர்தசரஸ் போன்ற இடங்களுக்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மொத்தம் 12 இரவுகளும் 13 பகல்கள் கொண்ட இந்த பேக்கேஜ் நவம்பர் 19 ஆம் தேதி கொச்சுவேலியில் (திருவனந்தபுரம்) இருந்து தொடங்குகிறது. IRCTC இணையதளமான irctctourism.com ஐப் பார்வையிடுவதன் மூலம் பயணிகள் இந்த சுற்றுலாப் பேக்கேஜுக்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | IRCTC தட்கல் ஆட்டோமேஷன் டூல் மூலமாக சட்டென்று ரயில் டிக்கெட்டை புக் செய்வது எப்படி?

டூர் பேக்கேஜின் கட்டண விவரம்:
டூர் பேக்கேஜூக்கான கட்டணமானது பயணிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட வகையின்படி இருக்கும். இந்த பேக்கேஜுக்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூ.26,310 முதல் தொடங்குகிறது. நீங்கள் ஸ்டாண்டர்ட் பிரிவில் (ஸ்லீப்பர் கிளாஸ்) முன்பதிவு செய்தால், ஒரு நபருக்கு ரூ.26,310 செலவழிக்க வேண்டும், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு, ரூ.24,600 செலவழிக்க வேண்டும். கம்ஃபர்ட் வகைக்கு (மூன்றாவது ஏசி வகுப்பு) முன்பதிவு செய்ய, நீங்கள் ஒரு நபருக்கு ரூ. 39,240 செலவழிக்க வேண்டும், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு, நீங்கள் ரூ.37,530 செலவிட வேண்டியிருக்கும்.

டூர் பேக்கேஜின் சிறப்பு அம்சங்கள்:
பேக்கேஜின் பெயர்-  Bharat Gaurav North Western Delight With Vaishnodevi (SZBG10)
டெஸ்டிநேசன் கவர்- அகமதாபாத், ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) , ஜெய்ப்பூர், வைஷ்ணோதேவி மற்றும் அமிர்தசரஸ் 
சுற்றுப்பயணம் எத்தனை நாட்கள் நீடிக்கும் - 12 இரவுகள் மற்றும் 13 பகல்கள்.
புறப்படும் தேதி- நவம்பர் 19 ஆம் தேதி, 2023
உணவுத் திட்டம் - காலை தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு.

ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: இந்த எண்ணில் உதவி பெறலாம்:
8287932064, 8287932082, 8287932117, 8287932095, 8287932098, 9003140655.

மேலும் படிக்க | இந்தியன் ரயில்வே.. புதிய ரூல்ஸ்: இரவு நேர பயண விதிகளில் மாற்றம், இனி இதையெல்லாம் செய்ய முடியாது!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News