IRCTC Booking Update: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி வந்துள்ளது. இதுவரை ஒருவர் ஒரு ஐஆர்சிடிசி கணக்கிலிருந்து ஒரு மாதத்தில் 6 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதை விட அதிக டிக்கெட்டுகளை புக் செய்ய உங்கள் கணக்கை ஆதார் உடன் இணைக்க வேண்டும் என்ற விதி இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், இப்போது டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை மாறப்போகிறது. இப்போது புதிய விதியின் கீழ், ஒரே ஒரு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டி இருந்தாலும், நீங்கள் ஆதார் விவரங்களை அளிக்க வேண்டும்.


IRCTC  மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய செயல்முறை


அடுத்த முறை நீங்கள் ஆன்லைனில் ஒரு ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது, ​​ஐஆர்சிடிசி உங்களிடம் பான், ஆதார் (Aadhaar Card) அல்லது பாஸ்போர்ட் தகவல்களையும் கேட்கக்கூடும். டிக்கெட் முன்பதிவு செயல்முறையிலிருந்து ரயில்வே டிக்கெட் தரகர்களை விலக்க ஐஆர்சிடிசி இந்த நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது. 


IRCTC ஒரு புதிய அமைப்புக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதில் நீங்கள் உங்கள் ஆதாருடன் பான்-ஐ இணைக்க வேண்டும். IRCTC இணையதளம் அல்லது செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, நீங்கள் லாக்-இன் செய்யும்போது, உங்கள், ஆதார், பான் அல்லது பாஸ்போர்ட் எண்ணை உள்ளிட வேண்டி இருக்கலாம்.


ALSO READ: Indian Railways: டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் இந்த விவரங்கள் உடனிருப்பது அவசியம்


ரயில் டிக்கெட் பான், ஆதார் உடன் இணைக்கப்படும்


ஐஆர்சிடிசி-யுடன் (IRCTC) அடையாள ஆவணங்களை இணைக்கும் திட்டத்தில் ரயில்வே செயல்பட்டு வருவதாக ரயில்வே பாதுகாப்பு படை (RPF) இயக்குனர் ஜெனரல் அருண்குமார் கூறினார். மோசடிக்கு எதிரான இந்த நடவடிக்கை மனித நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் இதன் விளைவு போதுமானதாக இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 


'இறுதியாக டிக்கெட்டுக்காக லாக்-இன் செய்யும்போது அதை பான், ஆதார் அல்லது பிற அடையாள ஆவணங்களுடன் இணைக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ஏற்படும் மோசடிகளை தவிர்க்க முடியும்.' என்றி அவர் விவரித்தார்.


இந்த செயல்முறை விரைவில் தொடங்கும்


"இதற்காக முதலில் ஒரு நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும். ஆதார் நிர்வாகத்துடன் எங்களது பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. முழு அமைப்பும் வேலை செய்யத் தயாரானவுடன், நாங்கள் அதை செயல்படுத்தி பிறகு பயன்படுத்தத் தொடங்குவோம். 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பரில் தரகர்களுக்கு எதிரான நடவடிக்கை தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 14,257 போலி தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை, 28.34 கோடி மதிப்புள்ள போலி டிக்கெட்டுகள் பிடிபட்டுள்ளன."  என்று அருண் குமார் கூறினார்.


இந்த விஷயங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கக்கூடிய ரயில் சுரக்ஷா செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அருண் குமார் தெரிவித்தார். 6049 நிலையங்கள் (Railway Stations) மற்றும் அனைத்து பயணிகள் ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவும் திட்டமும் உள்ளது என்றார் அவர்.


ALSO READ: Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR