ரயில் பயணத்தில் திருடு போன சாமான்களுக்கு இழப்பீடு கோரலாம்..!!
இந்திய இரயில்வே விதியின் கீழ், ரயில் பயணத்தின் போது பொருட்கள் திருடு போனால் அதற்கு இழப்பீடு கோரலாம் என்பது 80 சதவீத பயணிகளுக்குத் தெரியாத ஒன்றாக உள்ளது.
இந்திய இரயில்வேயின் பயணிகளின் வசதிக்காக, சில சிறப்பு விதிகளை கொண்டு வந்துள்ளன. உண்மையில், ரயிலில் பயணம் செய்யும் பயணிகளில் 80 சதவீதம் பேருக்கு இந்த விதிகள் தெரிவதில்லை.
பயணத்தின் போது உங்கள் சாமான்கள் திருடப்பட்டால், அதற்கு இழப்பீடு பெறலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. ரயிலில் தொலைந்து போன உங்கள் உடமைகளுக்கு இழப்பீடு கோரலாம். இதுமட்டுமின்றி, 6 மாதங்களுக்குள் உங்கள் பொருட்கள் வரவில்லை என்றால், நீங்கள் நுகர்வோர் மன்றத்திற்கும் செல்லலாம். இது தொடர்பாக, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விதிகள் உள்ளன.
திருடு போன பொருட்களுக்கான இழப்பீடு
உச்ச நீதிமன்ற விதியின்படி ரயிலில் பயணம் செய்யும் போது உங்களின் சாமான்கள் திருடப்பட்டால், ஆர்பிஎப் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கலாம். இது தொடர்பாக ஒரு படிவத்தை நிரப்பி விபரங்களை கொடுக்க வேண்டும். 6 மாதங்களாக பொருட்கள் வரவில்லை என்றால் நுகர்வோர் மன்றத்திலும் புகார் அளிக்கலாம் என அதில் எழுதப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பொருட்களின் விலையை கணக்கிட்டு, ரயில்வே தனது இழப்பீட்டை செலுத்துகிறது. இதன் மூலம் உங்கள் இழப்பு ஈடுசெய்யப்படும்.
மேலும் படிக்க | Indian Railways: 5 இலக்க ரயில் எண்ணில் புதைந்துள்ள தகவல்கள்!
காத்திருப்பு டிக்கெட் வைத்திருந்தால், ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணிக்க முடியாது. பயணம் செய்யும் போது பிடிபட்டால் குறைந்தபட்சம் ரூ.250 அபராதம் செலுத்திவிட்டு அடுத்த ஸ்டேஷனில் இருந்து ஜெனரல் கோச்சில் பயணிக்க வேண்டும். ஆனால் நான்கு பயணிகளில் இருவரின் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்பட்டால், TTE-யிடம் அனுமதி பெற்ற பிறகு, மீதமுள்ள இரண்டு பேர், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் உள்ள மற்ற இருவருடன் சேர்ந்து இருக்கையில் அமர்ந்து பயணிக்கலாம்
பயணத்தின் போது உங்களிடம் டிக்கெட் இல்லை என்றால், ரயில்வே சட்டத்தின் 138வது பிரிவின் கீழ், உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிரிவின் கீழ், நீங்கள் பயணித்த தூரத்திற்கு ரயில்வேயில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட எளிய கட்டணம் அல்லது ரயில் புறப்பட்ட நிலையத்திலிருந்து செல்லும் தூரத்திற்கு நிலையான எளிய கட்டணம் அல்லது ரூ.250 அபராதம் விதிக்கப்படும். உங்களிடம் குறைந்த வகுப்பு டிக்கெட் இருந்தால், கட்டண வித்தியாசமும் வசூலிக்கப்படும்.
இது தவிர, பயணச்சீட்டில் குளறுபடி செய்து பயணிக்கும் பயணிகள் சிக்கினால், ரயில்வே பிரிவு 137ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இதில், பயணிகளுக்கு 6 மாத சிறைத்தண்டனை, 1000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மேலும் படிக்க | Indian Railways: உங்கள் ரயில் டிக்கெட்டில் 'வேறு ஒருவரும்' பயணிக்கலாம்!
மேலும் படிக்க | IRCTC E-Catering: தரமான உணவு பெற அங்கீரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் பட்டியல் இதோ..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR