Amritsar-Jamnagar road highlights | இந்தியா சாலை கட்டமைப்பில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 1300 கிமீ தொலைவிலான பிரம்மாண்ட எக்ஸ்பிரஸ் வே பணிகள் எல்லாம் முடிவடைந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. இந்த விரைவுச் சாலையின் மொத்த நீளம் 1316 கிமீ ஆகும். இந்த புதிய தேசிய எக்ஸ்பிரஸ் வே, மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் காஷ்மீர் எல்லாம் இனி ஈஸியாக சென்று வரலாம். பயண நேரமும் வெகுவாக குறையும். 13 மணி நேரத்தில் எக்ஸ்பிர வே நீளமான 1300 கிமீ கடந்துவிட முடியும் என்பது தான் இந்த சாலையின் சிறப்பு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1300 கிமீ எகஸ்பிரஸ் வே எங்கு உள்ளது?


பயண நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் பல அதிவேக நெடுஞ்சாலைகள் இந்தியாவில் உள்ளன உள்ளன. ஆனால் அவற்றில் டெல்லி-மும்பை விரைவுச்சாலை பற்றியே அதிகம் பேசப்படுகிறது. இப்போது இந்த சாலைக்கு நிகரான, போட்டியாக இன்னொரு விரைவுச் சாலை திறக்கப்பட உள்ளது. அந்த சாலை தான் அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச்சாலை. ஏறத்தாழ பணிகள் எல்லாம் நிறைவடைந்துவிட்டதால், அடுத்த ஆண்டுக்குள் இது தொடங்க வாய்ப்புள்ளது. அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச்சாலை நாட்டிலேயே இரண்டாவது பெரிய விரைவுச்சாலை. டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் நீளம் 1350 கி.மீ. இந்த விரைவுச் சாலையின் நீளம் 1316 கி.மீ.


மேலும் படிக்க | விமான டிக்கெட் புக் பண்ண போறீங்களா... கம்மி விலையில் வாங்க சில டிப்ஸ்


அமிர்தசரஸில் இருந்து ஜாம்நகர் வரை தற்போது பயன்பாட்டில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை தூரம் 1,516 கிமீ. இந்த சாலையில் பயணத்தை முழுமையாக முடிக்க 26 மணி நேரம் ஆகும். ஆனால், புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் விரைவுச் சாலை சுமார் 216 கி.மீ தூரம் குறைவானது. அதனால், அமிர்தசரஸில் இருந்து ஜாம்நகர் வரையிலான பயணத்தை வெறும் 13 மணி நேரத்தில் சென்றடைந்துவிட முடியும். 


13 மணி நேரத்தில் எப்படி கடக்க முடியும்?


அமிர்தசரஸ் - ஜாம்நகர் இடையே வெறும் 216 கிமீ தொலைவு குறைவதால் எப்படி 13 மணி நேரத்தில் தூரத்தை கடக்க முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால், புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தேசிய விரைவுச் சாலையில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் வாகனங்கள் பயணிக்க முடியும். வேகத்தில் சிட்டாக வாகனங்கள் பறக்கும். அதனால் இந்த நேரத்தில் எளிதாக அமிர்தசர்ஸ் - ஜாம்நகர் சென்றுவிடலாம். அமிர்தசரஸ்-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ்வே புதிய சாலையின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் டெல்லி-என்சிஆர், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத் செல்லும் சாலைகளுடனும் இணைக்கப்படுகிறது. அப்படி இணைக்கும்போது குஜராத்தில் இருந்து காஷ்மீருக்கு பயணம் செய்வது மிக எளிதாகிவிடும். பதிண்டா, மோகா, ஹனுமன்கர், சூரத்கர், பிகானர், நாகூர், ஜோத்பூர், பார்மர் மற்றும் ஜாம்நகர் போன்ற முக்கிய நகரங்கள், 4 மாநிலங்கள் வழியாக பயணிக்கலாம்.


பாலைவனத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் வே 


புதிதாக அமைக்கபடும் அமிர்தசரஸ்-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ்வே ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பாலைவனம் வழியே செல்லும். இந்த விரைவுச் சாலையின் 500 கிலோமீட்டர் தூரம் ராஜஸ்தான் வழியாகச் செல்லும். இப்படி அமைக்கப்படும் புதிய விரைவுச் சாலையின் காரணமாக, பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பல தொழில் நகரங்கள் குஜராத்தின் தொழில் நகரங்களுடன் நேரடியாக இணைக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.


மேலும் படிக்க | Aadhaar Update: ஆதார் அட்டை அப்டேட் பண்ணிட்டீங்களா.. இன்னும் இரண்டு வாரம் தான் இருக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ