Aadhaar Card Update: உங்கள் ஆதார் அட்டையைப் இலவசமாக புதுப்பிக்க உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. UIDAI (இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம்) ஆதார் அட்டை விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை பல முறை நீட்டித்த நிலையில், இப்போது டிசம்பர் 14 வரை உங்கள் ஆதாரை இலவசமாகப் புதுப்பிக்கலாம்.
கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் ஆதாரில் எந்த விவரங்களையும் புதுப்பிக்கவில்லை என்றால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இலவசமாக ஆதார் விவரங்களை புதுப்பிக்கும் வாய்ப்பை தவறியிருந்தால், உங்களுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது. இந்த பணியை நீங்கள் டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும். எனது ஆதார் போர்ட்டலுக்குச் சென்று உங்கள் ஆதார் விவரங்களை இலவசமாகப் புதுப்பிக்கலாம். ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்க, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, முகவரிச் சான்று, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்கள் தேவைப்படலாம்.
ஆதாரில் எந்த விதமான தகவல்களை புதுப்பிக்க முடியும்?
டிசம்பர் 14ம் தேதிக்கு முன்னதாக, உங்கள் ஆதார் அட்டையில் புகைப்படம், பாலினம், பெயர், பிறந்த தேதி மற்றும் முகவரி போன்ற தகவல்களை எளிதாகப் புதுப்பிக்கலாம். இதுமட்டுமின்றி, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் போன்ற தகவல்களையும் புதுப்பிக்கலாம்.
மேலும் படிக்க | இறந்தவரது பான் ஆதார் கார்டு தொடர்பான விதிகள்... உறவினர்கள் செய்ய வேண்டியது என்ன...
ஆதார் அட்டையில் உங்கள் விவரங்களைப் புதுப்பிக்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
1. முதலில் ஆதார் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://myaadhaar.uidai.gov.in/ க்குச் செல்லவும்.
2. பதிவு செய்யப்பட்ட மொபைலில் பெறப்பட்ட OTP உதவியுடன் உள்நுழையவும்.
3. இதில் உங்கள் ப்ரொஃபைல் அதாவது சுயவிவரத்தைக் காண்பீர்கள். அதில் நீங்கள் மாற்ற விரும்பும் தகவலைப் புதுப்பிக்கவும்.
4. இப்போது புதுப்பிக்கப்பட வேண்டிய தகவல் தொடர்பான ஆதாரத்தின் நகலை இணைத்து அதைச் சமர்ப்பிக்கவும்.
நீங்கள் சமர்பிக்கும் ஆவணத்தின் அளவு 2 MB க்கும் குறைவாக இருக்கக்கூடாது மற்றும் கோப்பின் வடிவம் JPEG, PNG அல்லது PDF ஆக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம். இந்த வேலையை நீங்கள் டிசம்பர் 14 ஆம் தேதி வரை முடிக்க வேண்டும் (ஆதார் அட்டை புதுப்பிப்பு காலக்கெடு).
உங்கள் ஆதார் விவரங்களை ஆஃப்லைனிலும் புதுப்பிக்கலாம். இதற்கு நீங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். ஆனால் ஆதாரை ஆஃப்லைனில் புதுப்பிக்க, 50 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க | Aadhaar Card: ஆதார் அட்டையில் இத்தனை வகைகளா... உங்களுக்கு ஏற்றது எது...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ