துவக்க நாள் விழா கொண்டாட்டம் காரணமாக ரூ.999-க்கு விமான டிக்கெட் அளிக்க இண்டிகோ நிறுவனம் முன்வந்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல வான்வழி சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனம் தொடங்கி 13 ஆண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ‘இண்டிகோ உள்நாட்டு விமான சேவை கட்டணம் ரூ .999 முதல், சர்வதேச விமான சேவை கட்டணம் ரூ .3,499 முதல் விற்கப்படுகிறது. 


இந்த சலுகைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் வரும் ஜூலை 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனவும், ஆகஸ்ட் 15, 2019 முதல் மார்ச் 28, 2020 வரையிலான பயணங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


மேலும்  எஸ் பேங்க் க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு டிக்கட் புக் செய்தால் ரூ.2000 கேஷ்பேக் அளிக்கப்படுகிறது (குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ .10,000 ஆக இருக்க வேண்டும்).



அதேப்போல் பாங்க் ஆப் பரோடா க்ரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை பயன்படுத்தி டிக்கட் புக் செய்தால் 20% (ரூ.1000 வரை) கேஷ்பேக் அளிக்கப்படுகிறது (குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ .4,000 ஆக இருக்க வேண்டும்).  


ஜூலை 31, 2019 துவங்கி ஆகஸ்ட் 4, 2019 வரை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழிகளில் செய்யும் முன்பதிவுகளுக்கு இந்த சலுகை பொருந்தும் எனவும் , குரூப் புக்கிங் செய்தால் இந்தச் சலுகை கிடைக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.