பட்ஜெட் தடைகள் காரணமாக உங்கள் சர்வதேச பயணத் திட்டங்களை நீங்கள் தடுத்து வைத்திருந்தால், உங்களுக்காக ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. ஆம் இண்டிகோ தனது சர்வதேச விமான சேவையில் ஒரு பெரிய விற்பனை சலுகையினை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபல வான்வழி சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ‘இண்டிகோ சர்வதேச விமான சேவை கட்டணம் ரூ.3,499 முதல்’ விற்கப்படுகிறது. 


இந்த சலுகைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பிப்ரவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனவும், மார்ச் 1, 2020 முதல் செப்டம்பர் 30, 2020 வரையிலான பயணங்களுக்கு இந்த டிக்கெட்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.



மேலும்  பேங்க் ஆப் பரோடா வங்கி க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு டிக்கட் புக் செய்தால் ரூ.2000 கேஷ்பேக் அளிக்கப்படுகிறது (குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ.10,000 ஆக இருக்க வேண்டும்), ஆதாவது 15% வரையில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.


அதேப்போல் HDFC வங்கியில் PayZapp சலுகையினை பயன்படுத்தி டிக்கட் புக் செய்தால் 15% (ரூ.1000 வரை) கேஷ்பேக் அளிக்கப்படுகிறது (குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ.4,000 ஆக இருக்க வேண்டும்).  


அதேப்போல் இந்துஸ்லாந்த் வங்கி க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு டிக்கட் புக் செய்தால் ரூ.5000 வரே கேஷ்பேக் அளிக்கப்படுகிறது (குறைந்தபட்ச பரிவர்த்தனை ரூ.4,000 ஆக இருக்க வேண்டும்).


 பிப்ரவரி 18-ம் தேதி முதல் பிப்ரவரி 21-ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வழிகளில் செய்யும் முன்பதிவுகளுக்கு இந்த சலுகை பொருந்தும் எனவும் , குரூப் புக்கிங் செய்தால் இந்தச் சலுகை கிடைக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.