சிறந்த ஓய்வூதியத் திட்டம்: ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையை அனுபவிக்க, ரிடயர்மென்ட் காலத்திலும் தங்கள் செலவுகளைத் தக்க வைத்துக் கொள்ள, ஒவ்வொருவரும் பணத்தைச் சேமிக்கத் திட்டமிடுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வரும் நாளை சிறப்பாக மாற்ற 42 ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.210 அல்லது இரண்டு தசாப்தங்களுக்கு மாதம் ரூ.1,454 முதலீடு செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana, APY) என்பது முக்கியமாக அமைப்புசாரா துறை ஊழியர்களை மையமாகக் கொண்ட அரசு நடத்தும் திட்டமாகும். ஒரு தனிநபர் 18 முதல் 40 வயதுக்குள் ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம், அதன் மூலம் தனிநபரின் பங்களிப்பு மற்றும் வயதைப் பொறுத்து ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை நிலையான குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தைப் பெறலாம்.


மேலும் படிக்க | பழைய ஓய்வூதிய திட்டம்.... முக்கிய அப்டேட்: மாநில அரசுகளுக்கு ரிசர்வ் வங்கி அளித்த எச்சரிக்கை


அடல் பென்ஷன் யோஜனா (APY) இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது. அதாவது, வாடிக்கையாளர் ஒவ்வொரு மாதமும் ரூ.210 முதலீடு செய்தால், அவருக்கு மொத்தம் ரூ.60,000 கிடைக்கும். இதற்கு நீங்கள் வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ சேமிப்புக் கணக்கைத் தொடங்கினால் போதும்.


அடல் பென்ஷன் யோஜனாவில் யார் முதலீடு செய்யலாம்?
PFRDA இன் படி, APY அமைப்புசாரா துறையில் உள்ள அனைத்து குடிமக்களையும் இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் மே 2015 இல் தொடங்கப்பட்டது மற்றும் PFRDA ஆல் நிர்வகிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகள் மூலமாகவும் செயல்படுத்தப்படுகிறது.


18 வயதில் தொடங்கி ரூ.2,43,120 வரை எப்படி சேமிப்பது?
APY க்குள் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 ஃபிக்ஸ்ட் பெறுங்கள். ஒருவர் 18 வயதில் மாதம் ரூ.210 முதலீடு செய்யத் தொடங்கினால், அவர் மொத்தம் ரூ.105840 முதலீடு செய்கிறார் என்றாகும். அதேபோல், 40 வயதில் மாதம் ரூ.1454 முதலீடு செய்யத் தொடங்கினால், ரூ.348960 முதலீடு செய்கிறார் என்றாகும். அதாவது ஒருவர் இளம் வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்தால் ரூ.243120 சேமிக்க முடியும்.


அதேபோல் சந்தாதாரரின் மரணத்திற்குப் பிறகு அதே ஓய்வூதியம் அவர் கணவன்/மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.   இறுதியாக அவரும் அவரது துணை ஆகிய இருவருமே இறக்கும் பட்சத்தில், அவர்களால் நியமிக்கப்பட்டவருக்கு (nominee) மொத்த ஓய்வூதியத் தொகையும் வழங்கப்படும்.


அடல் பென்ஷன் யோஜனாவின் ஓய்வூதிய விருப்பங்கள்
5000 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் தவிர, மாதத்திற்கு ரூ 1000, ரூ 2000, மாதம் ரூ 3000 மற்றும் மாதம் ரூ 4000 உட்பட பலவிதமான ஓய்வூதிய விருப்பங்களிலிருந்து ஏதேனும் ஒன்றை முதலீட்டாளர்கள் தேர்வு செய்யலாம்.


அடல் பென்ஷன் யோஜனாவுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
APY சந்தாதாரர் படிவம் அனைத்து வங்கி இணையதளங்களிலும் ஆன்லைனில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து தங்கள் வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவுடன் அடல் பென்ஷன் யோஜனா கணக்கை நீங்கள் எளிதாக திறக்கலாம். மேலும் வங்கி சேமிப்புக் கணக்கின் மூலம் மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் மூலம் சந்தா செலுத்தும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. 


மேலும் படிக்க | சந்தோஷத்தில் திளைக்கும் ஊழியர்கள்... ஊதியத்தை அதிகரித்த மாநில அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ