PPF vs NPS vs SSY குறைந்தபட்ச வைப்புத் தொகை: பொது வருங்கால வைப்பு நிதி (PPF), தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிக முக்கியமான செய்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரிச் சேமிப்புத் திட்டங்களுக்கு, கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சத் தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் கணக்கு செயலில் உள்ளதா என்பதைச் சரிபார்க்க முடியும். அதாவது, மார்ச் 31 ஆம் தேதிக்குள், இந்த கணக்குகளின் இருப்பை நீங்கள் எப்படியும் புதுப்பிக்க வேண்டும்.


மார்ச் 31 க்கு முன் சரிபார்க்கவும்


இதுவரை இந்தக் கணக்குகளைச் சரிபார்க்கவில்லை என்றால், இன்றே அவற்றைச் சரிபார்க்கவும். நடப்பு நிதியாண்டில் இந்தக் கணக்குகளில் நீங்கள் எந்த தொகையையும் டெபாசிட் செய்யவில்லை என்றால், மார்ச் 31, 2022க்குள், தேவையான குறைந்தபட்சத் தொகை-யை அதில் டெபாசிட் செய்ய வேண்டும், இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கணக்குகள் செயலிழக்கப்பட்டால், அவற்றை மீண்டும் செயல்படுத்துவதற்கு நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். 


குறைந்தபட்ச பங்களிப்பு தேவை


நடப்பு 2021-22 நிதியாண்டிற்கு புதிய அல்லது பழைய வரி முறை என எதை நீங்கள் தேர்வுசெய்தாலும், கணக்கை செயலில் வைத்திருக்க தேவையான குறைந்தபட்ச பங்களிப்பை டெபாசிட் செய்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்துவது முக்கியமாகும். இந்த முக்கியமான திட்டங்களில் எந்த திட்டத்தில் எவ்வளவு குறைந்தபட்ச இருப்புத் தொகை இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


மேலும் படிக்க | GST: ஏப்ரல் 1 முதல் மிகப்பெரிய மாற்றம், நிறுவனங்கள் மீது நேரடி தாக்கம் 


1. பிபிஎஃப்-இல் டெபாசிட் செய்ய வேண்டிய குறைந்தபட்ச தொகை


பிபிஎஃப்- இல் ஒரு நிதியாண்டிற்கான குறைந்தபட்ச வருடாந்திர பங்களிப்பு ரூ.500 ஆகும். இதனுடன், நடப்பு நிதியாண்டில் இந்த பங்களிப்பைச் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என்பதையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இதுவரை தொகையை டெபாசிட் செய்யவில்லை என்றால், விரைவில் அதைச் செய்யுங்கள். இல்லையெனில், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 500 நிலுவையில் உள்ள சந்தா தொகையுடன் ரூ. 50 அபராதமும் செலுத்த வேண்டும். உங்கள் கணக்கு மூடப்பட்டால், அதில் உங்களுக்கு எந்த கடனும் கிடைக்காது.


2. என்பிஎஸ்-இல் டெபாசிட் செய்ய வேண்டிய குறைந்தபட்ச தொகை


விதிகளின்படி, டயர்-I என்பிஎஸ் கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.1,000 டெபாசிட் செய்வது கட்டாயமாகும். அதே சமயம், என்பிஎஸ் டயர்-I கணக்கில் குறைந்தபட்ச பங்களிப்பை வழங்கவில்லை என்றால், கணக்கு செயலற்றதாகிவிடும். இதற்கு நீங்கள் 100 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இது மட்டுமின்றி, ஒருவரிடம் டயர் II என்பிஎஸ் கணக்கு இருந்தால் (இங்கு நிதிகளை லாக்-இன் செய்யத் தேவையில்லை) டயர்-I கணக்கு முடக்கப்படுவதுடன் டயர்-II கணக்கும் தானாகவே மூடப்படும். .


3. சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம்


சுகன்யா சம்ரித்தி கணக்கில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் வைப்புத் தொகையை வைத்திருப்பது கட்டாயமாகும். இல்லையெனில் இதற்கு 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எஸ்எஸ்வொய் கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் முடிவதற்குள் ஒரு டீஃபால்ட் கணக்கு ரெகுலேட் செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்தக் கணக்கில் குறைந்தபட்சத் தொகையை நீங்கள் இன்னும் செக் செய்யவில்லை என்றால், அதை இன்றே செய்து புதுப்பிக்கவும்.


மேலும் படிக்க | இன்றும் நாளையும் வங்கி சேவை பாதிக்கப்படலாம்! முக்கிய தகவல் வெளியீடு


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR