IRCTC: மூத்த குடிமக்களுக்கு கன்பர்ம் லோயர் பர்த்? ரயில்வே கூறியது என்ன..!!
மூத்த குடிமக்களுக்கு ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்குகிறது, அவற்றில் ஒன்று லோயர் பெர்த்திற்கு அளிக்கப்படும் முன்னுரிமை. ஆனால் பல நேரங்களில் அவர்களுக்கு லோயர் பெர்த் கிடைப்பதில்லை.
Indian Railways: மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் பயணம் செய்யும் போது லோயர் பெர்த்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆனால் டிக்கெட் முன்பதிவின் போது மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த்திற்கு முன்னுரிமை கொடுக்குமாறு கோரினாலும், பல சமயங்களில் அவர்களுக்கு நடு பெர்த்தும், மேல் பெர்த்தும் தான் கிடைக்கிறது. இது மூத்த குடிமக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
மூத்த குடிமக்களுக்கு ஏன் லோ பெர்த் கிடைப்பதில்லை ?
சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில், ஒரு பயணி இந்த கேள்வியை இந்திய ரயில்வேயிடம் கேட்டு, அது ஏன் அப்படி இருக்கிறது, அதை சரிசெய்ய வேண்டும் என்று கூறினார். ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை டேக் செய்து, சீட் ஒதுக்குவதில் என்ன லாஜிக் இருக்கிறது என்று பயணி எழுதியுள்ளார். நான் மூன்று மூத்த குடிமக்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தேன். ஆனால், 102 காலியிடங்கள் இருக்கும் போதிலும், அவர்களுக்கு நடு பெர்த், மேல் பெர்த் வழங்கப்பட்டது . நீங்கள் அதை சரிசெய்ய வேண்டும் எனக் கோரினார்.
ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!
IRCTC அளித்த பதில்
பயணியின் இந்த கேள்விக்கு ஐஆர்சிடிசி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளது. ஐஆர்சிடிசி அளித்த பதிலில்- லோயர் பெர்த்ஸ்/சீனியர் சிட்டிசன் கோட்டா பெர்த்துகள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண்கள், 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட லோயர் பெர்த்துகள். அவர்களுக்கான டிக்கெட் புக் செய்யும் போது, தனியாக பயணம் செய்யும் போதோ, அவர்கள் உட்பட இரு பயணிகள் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் போதோ ஒதுக்கப்படுகிறது. இரண்டுக்கு மேற்பட்ட வர்களுக்கு டிக்கெட் புக் செய்யும் போது, அதில் உள்ள ஒருவர் மூத்த குடிமகனாக இல்லாவிட்டால், சிஸ்டம் அதை கருத்தில் கொள்ளாது என்று ஐஆர்சிடிசி தெளிவு படுத்தியுள்ளது.
எனவே மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் புக் செய்கையில், அவர்களுக்கு தனியாக டிக்கெட் புக் செய்யும் நிலையில், அவர்களுக்கு லோயர் பர்த் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுக்க மூத்த குடிமக்களுக்கான சலுகை உட்பட பல வகை சலுகை டிக்கெட்டுகளை இந்திய ரயில்வே கடந்த ஆண்டு நிறுத்தியது.
கோவிட் -19 தொடர்பான தற்போதைய சுகாதார துறை ஆலோசனை மற்றும் அத்தியாவசியமற்ற பயணங்களை தடுக்கும் நோக்கில், பல சலுகைகள் திரும்ப பெறப்பட்டுள்ளன.
ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G