IRCTC Nepal Package: இந்தியாவின் அண்டை நாடாக இருப்பதைத் தவிர, நேபாளம் சுற்றூலா செல்வதற்கான சிறந்த நாடு. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேபாளத்த்திற்கு சுற்றுலா செல்கின்றனர். நேபாளத்தில் காத்மாண்டு, பொக்காரா உள்ளிட்ட பல இடங்கள் இந்தியர்கள் அதிகம் செல்லும் இடங்கள். கோடைகாலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி, இந்திய சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் நேபாளத்திற்கு செல்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேபாளத்தில் சுற்றி பார்க்க பல இயற்கை அழகு மிகுந்த இடங்கள் உள்ளன. அவற்றில் மலைப்பகுதிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்திய சுற்றுலா மற்றும் பயண நிறுவனங்களும் நேபாளம் தொடர்பான பேக்கேஜ்களை ஐஆர்சிடிசி  தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.


நேபாளத்திற்கான 5 இரவுகள் 6 நாட்களுக்கான பேக்கேஜ்


ஐஆர்சிடிசி ஒவ்வொரு மாதமும் நேபாளத்திற்கு பல்வேறு வகையான பேக்கேஜ்களை நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஐஆர்சிடிசி நேபாளத்திற்காக ஒரு சிறப்பு தொகுப்பை அறிமுகப்படுத்தியது. இந்த தொகுப்பின் பெயர் CLASSIC NEPAL EX CHENNAI. நேபாளத்தின் இந்த பேக்கேஜ் சென்னைவாசிகளுக்கு பலன் அளிக்கும்.  வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் இருந்து சுற்றுலா பயணம் தொடங்கும். இந்த பேக்கேஜ் 5 இரவுகள் மற்றும் 6 பகல்களுக்கானது. இந்த பேக்கேஜில் உங்களுக்கு ஆங்கிலம் பேசும் சுற்றுலா வழிகாட்டியும் வழங்கப்படும். தவிர, IRCTC டூர் மேலாளரின் சேவையும் பேகேஜில் கிடைக்கும்.


நேபாளத்திற்கான பேக்கேஜ் விபரம்


பேஜ்கேஜில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் எகானமி டிக்கெட் அடங்கும். இந்த பேஜேக் மூலம் நீங்கள் விமானம் மூலம் நேபாளத்தை அடையலாம். விஸ்தாரா ஏர்லைன்ஸின் எகானமி வகுப்பு டிக்கெட் மூலம், நீங்கள் சென்னையில் இருந்து டெல்லி வழியாக காத்மாண்டுக்கு பயணிக்கலாம். நேபாளத்தின் இந்த சிறப்புப் பேக்கேஜில், நீங்கள் நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு மற்றும் பொக்காராவை சுற்றி பார்க்கலாம். மேலும் இந்த பேக்கேஜில் நீங்கள் 3 இரவுகள் காத்மாண்டுவிலும், 2 இரவுகள் பொக்காராவில் தங்குவீர்கள். 5 காலை உணவுகள், 5 மதிய உணவுகள் மற்றும் 5 இரவு உணவுகள் அடங்கிய பேக்கேஜில் உங்களுக்கு உணவும் வழங்கப்படும். இது தவிர, தினமும் தலா இரண்டு பாட்டில்கள் அரை லிட்டர் தண்ணீரும் வழங்கப்படும்.


மேலும் படிக்க | மதுரை டூ பத்ரி - கேதார்நாத்... IRCTC வழங்கும் பாரத் கவுரவ் யாத்திரை பேக்கேஜ்..!!


இது தவிர, நேபாளத்தில் நீங்கள் ஏசி வாகனத்தில் ஊரை சுற்றி பார்க்க அழைத்துச் செல்லப்படுவீர்கள். சுற்றுலா இடங்களுக்கான நுழைவுச் சீட்டுகளும் இந்த பேக்கேஜின் கட்டணத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், 59 வயதிற்கு உட்பட்ட நபர்களுக்கு, இந்தத் பேகேஜில் பயணக் காப்பீடும் கிடைக்கும்.


பேக்கேஜை முன்பதிவு செய்ய ஆகும் கட்டண விபரம்


நேபாளத்திற்கான பேகேஜை முன்பதிவு செய்ய எவ்வளவு செலவாகும் என்பதை இப்போது அறிந்து கொள்ளலாம். IRCTC இந்த பேக்கேஜிற்கான கட்டணமாக ஒருவருக்கு ரூ.61,500 என நிர்ணயித்துள்ளது. இந்த ஷேரிங் பேக்கேஜுக்கு இரண்டு பேருக்கு கட்டணம் ரூ.54,000 மற்றும் மூன்று பேருக்கு ரூ.53,500. நீங்கள் உங்கள் குழந்தைகளை நேபாளத்திற்கு அழைத்துச் சென்றால், நீங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.46,800 முதல் ரூ.42,800 வரை இருக்கும்.


(SMO36) என்பது தொகுப்பின் முன்பதிவு குறியீடு


நேபாள்த்திற்கான பேக்கேஜ் முன்பதிவு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற விதியின் அடிப்படையில் இருக்கும். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்தும் பேக்கேஜை ஆன்லைனில் பதிவு செய்யலாம். தொகுப்பின் முன்பதிவு குறியீடு (SMO36). அதேசமயம் ஆஃப்லைனில் முன்பதிவு செய்ய நீங்கள் IRCTC அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.


மேலும் படிக்க | வெளிநாடு டூர் இனி எளிது தான்... IRCTC வழங்கும் சில வெளிநாட்டு பேக்கேஜ்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ