IRCTC new rule: ஆன்லைன் ரயில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்திலிருந்து (IRCTC) ஆன்லைனில் டிக்கெட் வாங்குபவர்கள் இப்போது மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வெரிஃபை செய்ய வேண்டும் (Mobile And e Mail Verification). அதன் பிறகுதான் நீங்கள் டிக்கெட் எடுக்க முடியும். இந்த விதி நீண்ட காலமாக டிக்கெட் வாங்காத பயணிகளுக்கானது. இருப்பினும், இந்த செய்து முடிக்க  50 முதல் 60 வினாடிகள் மட்டுமே எடுக்கும் என்பதால் எளிதான வேலை தான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா தொற்று (Corona Virus) காரணமாக நீண்ட காலமாக டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக, ரயில்வே புதிய விதிகளை (Online Rail Tickets Booking Rule) உருவாக்கியுள்ளது. அத்தகையவர்கள் ஐ.ஆர்.சி.டி.சி போர்ட்டலில் இருந்து டிக்கெட் வாங்க தங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சலை வெரிபை செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு டிக்கெட் கிடைக்கும். அதாவது, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்ணை சரிபார்த்த பின்னரே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இருப்பினும், வழக்கமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பணிகள் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை.


ALSO READ | IRCTC வழங்கும் 'Alert' சேவை; இனி கன்பர்ம் டிக்கெட் பெறுவது மிக எளிது..!!!


கொரோனா தொற்று குறைந்தவுடன் ரயில்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கியுள்ள நிலையில், டிக்கெட் விற்பனையும் அதிகரித்துள்ளது. தற்போது, ​​24 மணி நேரத்தில் சுமார் எட்டு லட்சம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ஐ.ஆர்.சி.டி.சியின் டெல்லி தலைமையகத்தின் மூத்த அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், கொரோனா நோய்த்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலை மற்றும் அதற்கு முன்னர் போர்ட்டலில் செயலற்ற நிலையில் இருந்த கணக்குகளை உறுதி செய்வதற்காக மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் சரிபார்ப்பு செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


வெரிபிகேஷன்  எவ்வாறு செய்யப்படுகிறது?


நீங்கள் ஐ.ஆர்.சி.டி.சி போர்ட்டலில் உள்நுழையும்போது, ​வெர்பிகேஷன் விண்டோ திறக்கும். ஏற்கனவே பதிவுசெய்த மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை அதில் உள்ளிடவும். இப்போது இடது பக்கத்தில் திருத்துவதற்கும் வலது பக்கத்தில் சரிபார்ப்பதற்கும் ஒரு ஆப்ஷன் இருக்கும். திருத்து விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் உங்கள் எண் அல்லது மின்னஞ்சலை மாற்றலாம்.


வெரிபிகேஷன் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கும்போது, ​​உங்கள் எண்ணுக்கு OTP (One Time Password) அனுப்பப்படும். OTP ஐ உள்ளிடும்போது உங்கள் மொபைல் எண் சரிபார்க்கப்படுகிறது. இதேபோல், மின்னஞ்சலுக்கும் வெரிபிகேஷன் செய்யப்பட வேண்டும். மின்னஞ்சலில் பெறப்பட்ட OTP மூலம்  வெரிபிகேஷன் செய்யப்படுகிறது.


ALSO READ | IRCTC Booking Update: பான் - ஆதார் இணைப்பு விரைவில் வருகிறதா..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR