IRCTC Booking Update: பான் - ஆதார் இணைப்பு விரைவில் வருகிறதா..!!!

ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யச் செல்லும்போது, ​​ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பான், ஆதார் உள்ளிட்ட விரபங்களை நிரப்புவது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 13, 2021, 11:31 AM IST
IRCTC Booking Update: பான் - ஆதார் இணைப்பு விரைவில் வருகிறதா..!!! title=

IRCTC Booking Update: அடுத்த முறை நீங்கள் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யச் செல்லும்போது, ​​ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பான், ஆதார் உள்ளிட்ட விரபங்களை நிரப்புவது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில்வே டிக்கெட் புக்கிங் தொடர்பாக  நடக்கும் மோசடி சம்பவங்களை தடுக்க IRCTC முக்கிய மாற்றங்களை கொண்டு வர உள்ளது.

டிக்கெட் முன்பதிவிற்கு IRCTC புதிய அமைப்பு

IRCTC  டிக்கெட் புக்கிங்கில் புதிய மாற்றத்தை செய்ய உள்ளது. அதில்  உங்கள் ஆதார்-பான் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளம் அல்லது செயலி மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, நீங்கள் உள்நுழையும்போது ஆதார், பான் எண்ணை உள்ளிட வேண்டும். ரயில்வே டிக்கெட் ஏஜெண்டுகள், ஆன்லைன் டிக்கெட் புக்கிங் முறையை பயன்படுத்தி செய்யும் மோசடிகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. 

ரயில் டிக்கெட் பான், ஆதார் உடன் இணைக்கப்படும்

அடையாள ஆவணங்களை ஐ.ஆர்.சி.டி.சி உடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ரயில்வே செயல்பட்டு வருவதாக ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஜெனரல் அருண்குமார் தெரிவித்தார்.  மோசடி நடவடிக்கை கண்டறிந்து செயல்படும் முறை தற்போதைய நடவடிக்கை,  போதுமானதாக இல்லை என்று அவர் கூறினார்.  எனவே, டிக்கெட் முன்பதிவு செய்ய உள்நுழையும்போது,  அதை பான், ஆதார் அல்லது பிற அடையாள ஆவணங்களுடன் இணைக்க முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் மோசடியை நாம் நிறுத்தலாம்.

Also Read | இந்த 50 பைசா நாணயம் இருந்தால் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்- முழு விவரம்

புதிய முறை விரைவில் அமல் செய்யப்படும்

முதலில் இதற்கான ஒரு நெட்வொர்க்கை உருவாக்க வேண்டும் என்று கூறிய அருண்குமார் ஆதார் தொடர்பான எங்கள் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. புதிய செயல்முறை அமல்படுத்த  விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மோசடி  தொடர்பான புகார்களை எளிதில் வழங்கக்கூடிய வகையில் ரயில் சுரக்ஷா செயலி ஒன்று  உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அருண்குமார் தெரிவித்தார். 6049 நிலையங்கள் மற்றும் அனைத்து பயணிகள் ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவும் திட்டமும் உள்ளது என ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி கூறினார் .

ALSO READ | IRCTC: ரயில் பயணச்சீட்டில் இருக்கும் குறிச்சொற்களின் பொருள் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News