ஐஆர்சிடிசியின் 4 சூப்பரான டூர் பேக்கேஜ்கள்! கம்மி விலையில் வெளிநாடு சென்று வரலாம்
irctc tour packages: IRCTC டூர் பேக்கேஜ்கள்: IRCTCயின் நான்கு டூர் பேக்கேஜ்கள் பற்றி இங்கு சொல்கிறோம். இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம் நீங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யலாம். IRCTC ஏற்பாடு செய்யும் இந்த டூர் பேக்கேஜ்களில், நீங்கள் தங்குவது, உணவும் முற்றிலும் இலவசம்.
ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்கள்: சுற்றுலாப் பயணிகளுக்காக ஐஆர்சிடிசி பல்வேறு டூர் பேக்கேஜ்களை வழங்கி வருகிறது. இந்த டூர் பேக்கேஜ்கள் மூலம், சுற்றுலாப் பயணிகள் குறைந்த விலையில் வசதியாகவும் ஊர் சுற்றி பார்க்கலாம். ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் இலவசம். கோடைகாலம் தொடங்கியிருக்கும் நிலையில் ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்திருக்கும் பல்வேறு டூர் பேக்கேஜ்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
IRCTC அருணாச்சல டூர் பேக்கேஜ்
ஐஆர்சிடிசி அருணாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டூர் பேக்கேஜ் 7 இரவுகள் மற்றும் 8 பகல் பொழுதுகளை உள்ளடக்கியது. இந்த சுற்றுலா பேக்கேஜ் கொல்கத்தாவில் இருந்து தொடங்கும். இந்த டூர் பேக்கேஜில், சுற்றுலா பயணிகள் விமானத்தில் பயணம் செய்வார்கள். சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படும். ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜ் மே 18 ஆம் தேதி முதல் தொடங்கும். திராங், தவாங், போம்டிலா, தேஜ்பூர் மற்றும் பலுக்பாங் இடங்கள் இந்த டூர் பேக்கேஜில் இடம்பெற்றுள்ளது. ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பயணத் தொகுப்பை முன்பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க | முகேஷ் அம்பானி போல டாப் பணக்காரர் ஆவது எப்படி? ‘இந்த’ டிப்ஸை படிங்க..
IRCTC நேபாள டூர் பேக்கேஜ்
IRCTC சுற்றுலாப் பயணிகளுக்காக டெல்லி முதல் நேபாளம் வரையிலான சுற்றுலாத் தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. IRCTC இன் இந்த டூர் பேக்கேஜில் மொத்த இருக்கைகள் 30. இந்த சுற்றுலா மே, ஜூன் இரண்டு மாதங்களில் ஏற்பாடு செய்யப்படுள்ளது. மே 23, ஜூன் 15 ஆம் தேதிகளில் நேபாள சுற்றுலா தொடங்க இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் பொக்ராவுக்கு இரண்டு நாட்களுக்கும், காத்மாண்டுவுக்கு மூன்று நாட்களுக்கும் செல்வார்கள். ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜில், சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடுகள் இலவசம். சுற்றுலாப் பயணிகளுக்கு காலை மற்றும் இரவு உணவு வழங்கப்படும். இந்த டூர் பேக்கேஜின் பெயர் பெஸ்ட் ஆஃப் நேபால் எக்ஸ் டெல்லி.
IRCTC ராமாயண யாத்ரா டூர் பேக்கேஜ்
ஐஆர்சிடிசி சுற்றுலா பயணிகளுக்காக ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பில், சுற்றுலா பயணிகள் பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயிலில் பயணிப்பார்கள். IRCTC இன் இந்த டூர் பேக்கேஜ் 18 நாட்கள் ஆகும். இந்த டூர் பேக்கேஜில், சுற்றுலா பயணிகள் பகவான் ஸ்ரீ ராமருடன் தொடர்புடைய மத இடங்களுக்குச் செல்வார்கள். அதாவது, அயோத்தி, பக்சர், சித்ரகூட், ஹம்பி, ஜனக்பூர், நாக்பூர், நாசிக், பிரயாக்ராஜ், ராமேஸ்வரம், சீதாமணி மற்றும் வாரணாசி ஆகிய இடங்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜ் ஜூன் 7ஆம் தேதி தொடங்கும். இதேபோல், ஐஆர்சிடிசி சார்தாம் யாத்ரா சுற்றுலாத் தொகுப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐஆர்சிடிசி சார்தாம் யாத்ரா சுற்றுலா
ஐஆர்சிடிசியின் சார்தாம் யாத்ரா டூர் பேக்கேஜ் 12 நாட்கள் ஆகும். ஹரித்வார், பர்கோட், ஜான்கிச்சட்டி, யமுனோத்ரி, உத்தர்காஷி, கங்கோத்ரி, குப்தேஷ்வர், சோன்பிரயாக், கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய இடங்கள் இந்த சுற்றுலாத் தொகுப்பில் இடம்பெறும். ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜில், பக்தர்கள் போபாலில் இருந்து விமானம் மூலம் பயணிப்பார்கள். இந்த டூர் பேக்கேஜின் பெயர் சார்தாம் யாத்ரா உத்தரகாண்ட்.
மேலும் படிக்க | ஸ்ரீ ராம நவமி இன்று: வழிபடும் முறை, நேரம், விரதம் இருப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ