பொதுவாக உடலை நீரேற்றமாக வைத்திருக்கவு மற்றும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க மனிதர்கள் தினமும் 2 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  நமது உடலை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது அவசியம், அப்போது தான் எவ்வித பிரச்சனையும் நமக்கு வராது.  ஆனால் ஒரு நாளைக்கு 8 க்ளாஸ் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என கூறுவது தவறானது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  இந்த அளவு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்காது என்றாலும் இது உங்களுக்கு தேவையில்லாதது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  அபர்டீன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் சமீபத்தில் தண்ணீர் குடிப்பது பற்றி பரிசோதனை நடத்தினர், இந்த ஆய்விற்கு 23 நாடுகளிலிருந்து 5,604 பேர் எடுத்துக்கொள்ளப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | டிசம்பரில் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையா?



அந்த ஆய்வில் எட்டு முதல் 96 வயது வரையிலான நபர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டனர், இத்தனை நபர்களை வைத்து மேற்கொண்ட ஆய்வில் ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்கு 1.5 லிட்டர் முதல் 1.8 லிட்டர் வரையிலான தண்ணீர் மட்டும் போதுமானது என்றும் 2 லிட்டர் அளவு தண்ணீர் தேவையில்லை என்று கண்டறியப்பட்டு இருக்கிறது.  தண்ணீர் குடிப்பதால் மனிதனின் உடலில் இயற்கையாக டியூட்ரியம் உற்பத்தியாகிறது, இது எவ்வித தீங்கையும் விளைவிக்காது, ஆனால் அதிகளவு தண்ணீர் குடிப்பது டியூட்ரியத்திற்கு நல்லதல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  வெப்பமான மற்றும் குளிர் அதிகமான இடங்களில் வசிப்பவர்கள், உயரமான பகுதிகளில் வசிப்பவர்கள், விளையாட்டு வீரர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு மட்டும் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


அனைவரும் 2 லிட்டர் அளவு தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவது தவறு என்றும் நாம் சாப்பிடும் அளவுக்கேற்ப மட்டுமே தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ஒவ்வொருவரின் சாப்பிட்டு அளவு மற்றும் உடலை பொறுத்து தான் தண்ணீரின் அளவும் மாறுபடுகிறது.  20-35 வயதுக்குட்பட்ட ஆண்கள் தினசரி 4.2 லிட்டர் தண்ணீரும், 20-40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினசரி 3.3 லிட்டர் தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.


மேலும் படிக்க | ஃப்ரிட்ஜில் வைத்த உணவை சாப்பிவதால் இவ்வளவு பாதிப்புகள் வருமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ