7th Pay Commission ஜாக்பாட் செய்தி: விரைவில் எக்கச்சக்க ஊதிய உயர்வு.. அமலுக்கு வரும் அரசின் புதிய விதி
7th Pay Commission: ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரிக்கும். அகவிலைப்படி 50 சதவிகிதமாக அதிகரிக்கும்போது அரசாங்கத்தின் ஒரு விதி அமலுக்கு வரும்.
7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு செய்தி: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ அல்லது உங்கள் குடும்பத்தில் மத்திய அரசு ஊழியர்கள் யாராவது இருந்தாலோ, இந்த செய்தி உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். ஆம், மத்திய அரசின் கீழ் பணிபுரிபவர்களுக்கு விரைவில் பெரிய பலன்கள் கிடைக்கப் போகின்றன. அவர்களது ஊதியத்தில் பெரிய ஏற்றம் இருக்கப் போகிறது. ஒரே நேரத்தில் ஊழியர்களின் சம்பளம் மாதம் ரூ. 9000 உயரப் போகிறது. மத்திய அரசின் ஒரு விதியின் கீழ் இந்த மாற்றம் ஏற்படும். 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விதி அமலுக்கு வரும்போது, மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது 42 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கிறது
அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு இந்த மாற்றம் ஏற்படும். ஏழாவது ஊதியக் குழுவின் விதியின் கீழ், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்தப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இப்போது ஜூலை 1 முதல் பொருந்தக்கூடிய டிஏவில், இது 46 சதவீதமாக அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பிறகு, ஜனவரி 1, 2024 அன்று, அரசாங்கத்தால் மீண்டும் அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி 2024 -லும் அகவிலைப்படி உயர்வு 4 சதவிகிதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படி நடந்தால், ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரிக்கும். அகவிலைப்படி 50 சதவிகிதமாக அதிகரிக்கும்போது அரசாங்கத்தின் ஒரு விதி அமலுக்கு வரும்.
டிஏ 50 சதவீதம் ஆகும்போது அது பூஜ்ஜியமாக மாற்றப்படும்
ஏழாவது ஊதியக் குழுவின் கீழ், ஊழியர்களின் டிஏ 50 சதவீதமாக இருக்கும்போது அது பூஜ்ஜியமாக மாற்றப்படும் என்று ஒரு விதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்பட்ட உடன், அகவீலைப்படியின் 50% -க்கான தொகை அடிப்படை ஊதியத்தில் சேர்க்கப்படும். உதாரணமாக, ஒருவருக்கு ரூ.18,000 அடிப்படைச் சம்பளம் இருந்தால், டி.ஏ கிடைத்தவுடன் அது ரூ.27,000 ஆக உயரும். இதன் மூலம், அடிப்படை சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.9000 அதிகமாக கிடைக்கும். இதற்கு முன்பு 2016 ஆம் ஆண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்தது. அப்போது, 7வது ஊதியக் குழுவை அமல்படுத்தும் போது, ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் அகவிலைப்படி சேர்க்கப்பட்டது.
மேலும் படிக்க | 7th Pay Commission: மே 31 டிஏ ஹைக் பற்றிய முக்கிய அறிவிப்பு... விரைவில் சம்பள உயர்வு
அடிப்படை சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?
ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் தற்போது ரூ.18,000 ஆக இருந்து, அகவிலைப்படி உயர்ந்து ரூ.9,000 ஆனால், இரண்டையும் சேர்த்த பின்னர், அவரது அடிப்படைச் சம்பளம் ரூ.27,000 ஆக உயரும். அதன் பிறகு ஒரு சதவீதம், இரண்டு சதவீதத்தில் என அகவிலைப்படி அதிகரிப்பு மீண்டும் தொடங்கும். ஊழியர்கள் இப்போது சம்பள திருத்தத்திற்காக காத்திருக்க வேண்டும். முன்பு அகவிலைப்படி 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் நிகழ்வுகள் இருந்துள்ளன. இப்போது இந்த விதி அமலுக்கு வந்துள்ளது.
சம்பளம் 1,08,000 ரூபாய் அதிகரிக்கும்
தற்போது பே-பேண்ட் லெவல்-1 ஊழியர்களுக்கு உள்ள மிகக்குறைந்த அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும். இதில் 42 சதவீதம் கணக்கிட்டால், அகவிலைப்படி ரூ.7560 ஆகும். ஆனால் 50 சதவீதத்தின் படி இது ரூ.9000 ஆக இருக்கும். விதிகளின்படி, 50 சதவீதம் அகவிலைப்படி இருந்தால், அது அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். அதன்படி, 18,000 ரூபாய் அடிப்படை சம்பளம் பெறுபவர்களின் அடிப்படைத் தொகை ரூ.27,000 ஆக உயரும். ஆண்டுக்கு மாதம் 9,000 ரூபாய் என்று வைத்துக்கொண்டால், ஆண்டுக்கு ஊழியர்களுக்கு 1,08,000 ரூபாய் பலன் கிடைக்கும்.
மேலும் படிக்க | DA Hike: அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி! மே 31 முதல் சம்பள உயர்வு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ