7வது ஊதிய கமிஷன் சமீபத்திய செய்திகள்: ஜூலை 1, 2023 முதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அகவிலைப்படி அமலுக்கு வரும். மத்திய அரசு தரப்பில் இருந்து 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஜனவரி 2023 -ல் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. தற்போது ஊழியர்கள் 42 சதவிகித அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். ஜூலையிலும் அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பு இருந்தால், ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும்.
மத்திய அரசை தொடர்ந்து பல மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரித்துள்ளன. அந்த வரிசையில் குஜராத் அரசு மாநில அரசு ஊழியர்களுக்கு மாபெரும் நற்செய்தியை அளித்துள்ளது. குஜராத் அரசு ஊழியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் செய்தி ஒன்று வந்துள்ளது. ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 8 சதவீதம் உயர்த்தப்படுவதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.
9.50 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பயனடைந்தனர்
அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநில அரசின் சுமார் 9.50 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 7வது ஊதியக் குழுவின் கீழ் உள்ளனர். அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரண உயர்வு மூலம் இந்த ஊழியர்கள் பயனடைவார்கள். அரசின் 8 சதவீத அகவிலைப்படி உயர்வு இரண்டு பகுதிகளாக செயல்படுத்தப்படும். முதல் நான்கு சதவீத அகவிலைப்படி ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரும். மீதமுள்ள 4 சதவீத டிஏ உயர்வு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும். மத்திய அரசின் விதிகளின்படி அகவிலைப்படி உயர்வு செய்யப்பட்டுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவைத் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும்
முந்தைய நிலுவைத் தொகை மூன்று தவணைகளில் அரசால் விடுவிக்கப்படும். ஜூன் மாத சம்பளத்துடன் முதல் தவணை நிலுவைத் தொகை வழங்கப்படும். அதேபோல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தவணை அக்டோபர் 2023 சம்பளத்துடன் வழங்கப்படும். அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டதால், அரசு கருவூலத்திற்கு ரூ.4,516 கோடி கூடுதல் சுமை ஏற்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. முன்னதாக, குஜராத் அரசு ஆகஸ்ட் 2022 இல் அகவிலைப்படியை மூன்று சதவீதம் அதிகரித்து அறிவித்தது. இது ஜனவரி 1, 2022 முதல் செயல்படுத்தப்பட்டது.
தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீதம் டிஏ வழங்கி வருகிறது. அடுத்த டிஏ உயர்வு ஜூலை 1 முதல் மத்திய அரசால் அமல்படுத்தப்படும். இம்முறை அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் தமிழக அரசும் அகவிலைப்படியை உயர்த்தியது:
இந்த மாதம் 17 ஆம் தேதி மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவிகிதத்திலிருந்து 42 சதவிகிதமாக உயர்த்தி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்தார். விலைவாசி அதிகரித்து வரும் நிலையில் அரசின் இந்த செய்தி அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக வந்தது. இந்த அதிகரிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இதனால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாடு அரசுக்கு 2,366.82 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனினும். அரசு அலுவலர்கள். ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையைக் கனிவுடன் பரிசீலித்து. எதிர்வரும் காலங்களிலும் ஒன்றிய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம், உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வைச் செயல்படுத்திடும்.’ என அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் 2 பெரிய குட் நியூஸ்...டிஏ உடன் இதுவும் அதிகரிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ