செல்வமகள் சேமிப்புத் திட்டம் புதுப்பிப்பு 2023: குழந்தைகள், குறிப்பாக மகள்களுக்காக அரசாங்கம் தொடங்கிய பிரபலமான சேமிப்புத் திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) எனப்படும் செல்வமகள் செமிப்புத் திட்டம், முன்பை விட இப்போது கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளது. ஏப்ரல் 1, 2023க்குப் பிறகு இந்தக் கணக்கைத் திறந்தால், 40 புள்ளிகள் அதாவது முன்பை விட 0.40 சதவீதம் கூடுதல் வட்டியைப் பெறுவீர்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2023 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டத்தை மதிப்பாய்வு செய்த பிறகு, சில அரசு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. SSY (Sukanya Samriddhi Yojana New Update) இல் கிடைக்கும் வட்டி விகிதம் இப்போது ஆண்டுக்கு 7.6 சதவீதத்திற்கு பதிலாக 8 சதவீதமாக மாறியுள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், மெச்யூரிட்டியின் போது, 3 மடங்குக்கு மேல் அதாவது 200 சதவீதத்திற்கும் மேலான வருமானத்திற்கு உத்தரவாதம் உள்ளது. 


SSY புதிய அப்டேட்: 70 லட்சம் கிடைக்கும்


சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதம் ஆண்டுக்கு 8 சதவீதமாக உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இத்திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும். ஆனால், பெற்றோர்கள் 14 ஆண்டுகளுக்கு மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இந்த ஆண்டு முழுவதும் வட்டி அதிகமாகவே இருக்கும். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1,50,000 டெபாசிட் செய்யலாம். முதலீட்டு விருப்பம் மாதாந்திர அடிப்படையிலும் இருக்கலாம்.


இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்வது அவசியமாகும். தற்போதைய வட்டி விகிதங்களில், இந்தத் திட்டத்தின் மூலம் அதிகபட்சமாக ரூ.69.80 லட்சம் வரை ஈட்ட முடியும். முதலீட்டு விருப்பம் மாதாந்திர அடிப்படையிலும் இருக்கலாம். 


செல்வமகள் சேமிப்புத் திட்டம்: முதிர்ச்சியின் போது சுமார் 70 லட்சம் ரூபாய் கிடைக்கும்


- SSY வட்டி: ஆண்டுக்கு 8%
- அதிகபட்ச முதலீடு: ஆண்டுக்கு 1.50 லட்சம்
 - 15 ஆண்டுகளில் முதலீடு: ரூ 22,50,000
- 21 வருட முதிர்வு நிகரத் தொகை: ரூ 69,80,100
- SSY வட்டி பலன்: ரூ 47,30,100


மேலும் படிக்க | குழந்தையின் பெயரில் தினமும் ரூ.6 டெபாசிட் செய்தால் போதும்! லட்சத்தில் திரும்ப கிடைக்கும்! 


சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை ஆன்லைனில் திறக்க என்ன செய்ய வேண்டும்


- சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கைத் திறக்க, ஒருவர் தபால் நிலையத்திற்குச் சென்று SSY ஆன்லைன் படிவத்தை நிரப்ப வேண்டும்.


- இதற்கு மகளின் பிறப்புச் சான்றிதழ் அவசியமாகும். மகளின் வயது 10 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.


- பெற்றோரின் அடையாளச் சான்றும் தேவைப்படும். இதில் பான் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் என எந்த ஆவணத்தையும் இணைக்கலாம்.


- முகவரிச் சான்றுக்கான ஆவணங்களையும் பெற்றோர்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், மின் கட்டணம் அல்லது ரேஷன் கார்டு ஆகியவையும் இதில் செல்லுபடியாகும்.


- வங்கி அல்லது தபால் நிலையத்திலிருந்து உங்கள் ஆவணங்களை சரிபார்த்த பிறகு உங்கள் கணக்கு திறக்கப்படும்.


- சுகன்யா கணக்கு துவங்கிய பிறகு, கணக்கு வைத்திருப்பவருக்கு பாஸ்புக்கும் வழங்கப்படுகிறது.


- 2 பெண் குழந்தைகளுக்கு மேல் கணக்கு தொடங்க வேண்டும் என்றால், பிறப்புச் சான்றிதழுடன் பிரமாணப் பத்திரம் அளிக்க வேண்டும்.


3 வழிகளில் வரிச் சலுகைகள் கிடைக்கும்


செல்வமகள் செமிப்புத் திட்டம் வரிச்சலுகையுள்ள திட்டமாகும். இதில் EEE அதாவது வரிவிலக்கு மூன்று வெவ்வேறு நிலைகளில் கிடைக்கும். முதலாவதாக, வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ், ஆண்டுக்கு 1.50 லட்சம் வரையிலான முதலீட்டில் தள்ளுபடி உண்டு. இரண்டாவதாக, அதிலிருந்து பெறப்படும் வருமானத்திற்கு வரி இல்லை. மூன்றாவதாக, முதிர்வின்போது பெறப்படும் தொகைக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


முதிர்வுக்கு முன் பணத்தை எடுக்கலாம்


மகளுக்கு 18 வயது ஆகும்போது, ​​அவரது திருமணத்திற்காக முதிர்ச்சிக்கு முன் 50% தொகையை எடுக்கலாம். இது தவிர, கணக்கு துவங்கிய 5 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட சூழ்நிலையில் முதிர்வுக்கு முன் பணத்தை எடுக்கலாம். கணக்கு வைத்திருப்பவரின் திடீர் மரணம், பாதுகாவலரின் மரணம், கணக்கு வைத்திருப்பவரின் கடுமையான நோய் அல்லது கணக்கைத் தொடர இயலாமை போன்றவை இந்த சூழ்நிலைகளில் சிலவாகும்.


செல்வமகள் சேமிப்புத் திட்டம்: சில முக்கிய அம்சங்கள்


செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தற்போது எவ்வளவு வரி கிடைக்கும்?
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் தற்போது வட்டி விகிதம் 8% ஆக அதிகரித்துள்ளது.


செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கைத் தொடங்க குறைந்தபட்ச தொகை என்ன?
250 ரூபாயில் இந்த திட்டத்தில் கணக்கைத் திறக்கலாம்.


செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கை எப்படி திறப்பது?
இந்த கணக்கை அருகில் உள்ள தபால் அலுவலகம் அல்லது வங்கியில் திறக்கலாம்.


மேலும் படிக்க | ஜாக்கிரதை! உங்கள் PF கணக்கிலிருந்து இந்த வழிகளில் பணம் திருடு போகலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ