சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் தமன்னா. இவர், திரையுலகிற்கு வந்த புதிதில் இருந்தே, இவரது நிறத்தின் மீதும் அவர் அதை பராமரிக்கும் விதம் குறித்தும் பலருக்கு பலவித சந்தேகங்கள் இருக்கிறது. அவை என்னென்ன என்று இங்கே பார்ப்போமா..? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பளபளவென மின்னும் தமன்னா: 


நடிகை தமன்னா, கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளார். அவர் முதன்முதலாக அறிமுகமான ‘கேடி’ படம் முதல் தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் படம் வரை அவரது நிறம் மாறாமல் இருக்கிறது. அதை பாராட்டும் வகையில் இவருக்காக “அட ரோஸு ரோஸு” பாடல் எல்லாம் பாடப்பட்டுள்ளது. சரி, தனது தேகத்தை பாதுகாக்க தமன்னா செய்யும் காரியங்க்ள என்னென்ன தெரியமா..? 


மேலும் படிக்க | நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தாரக மந்திரம் ! சிரிப்பு அழகானது


பெரிதாக மேக்-அப் உபயோகிக்க மாட்டார்:


தமன்னா, பட வேலைகள் அல்லது பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது தவிர்த்து பிற சமயங்களில் மேக்-அப் அதிகமாக உபயோகிக்க மாட்டார். அதிகம் திரவகம் கலந்த பொருட்களைட் தன் முகத்தில் தடவிக்கொள்ள பிடிக்காது என அவரே சில நேர்காணல்களில் கூறியிருக்கிறார். வீட்டில் இருக்கும் போது மேக்-அப்பை தவிர்ப்பதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார், 


தமன்னாவின் மேக் அப்:


தமன்னா, நியூயார்க், பாரிஸ் போன்ற நகரங்களில் இருந்துதான் தனக்கான மேக்-அப் பொருட்களை வாங்கிக்கொள்வாராம். லைட்டான ஃபௌண்டேஷன் மற்றும் கண்ணங்களில் ப்ளஷ் போன்றவையே இவர் அதிகம் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள். படப்பிடிப்பு சமயங்களில் ஷூட்டிங் முடிந்தவுடன் மேக்-அப்பை துடைத்து விடுவதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். மேலும், இரவு தூங்க செல்வதற்கு முன்பும் இவர் மேக்-அப்பை கழுவி விடுவாராம். சருமத்தை சுத்தம் செய்வது, டோன் செய்வது போன்றவற்றையும் இவர் கடைப்பிடிக்கிறார். 


தமன்னாவின் சிகை அலங்காரம்:


ஆள் பாதி-ஆடை பாதி என்றால், அழகில் பாதி நல்ல சிகை அலங்காரத்தில் உள்ளது. இவர், தனது முடியை பராமறிக்க வீட்டில் தயார் செய்யும் எண்ணெயை உபயோகிக்கிறார். இதனால்தான் அவரது முடி மிகவும் மிருதுவாகவும் அடர்த்தியாகவும் உள்ளது. 


உணவு பழக்கங்கள்:


தமன்னாவிற்கு தென்னிந்திய உணவு வகைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். மேலும், தயிர்தான் இவருக்கு பிடித்த உணவு என்றும் சில இடங்களில் குறிப்பிட்டு இருக்கிறார். தனது உணவுகள் அனைத்திலும் எப்படியாவது இவர் தயிர் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்வாராம். அடிக்கடி தண்ணீர் குடிப்பது, பழங்கள் சாப்பிடுவது இவரது வழக்கம். பெரும்பாலும் வீட்டில் தயாரித்த உணவு வகைகளை சாப்பிடுவதால் இவரது சருமம் நன்றாக இருப்பதாக இவர் நம்புகிறார். துரித உணவுகளுக்கு பை-பை சொல்லிய நடிகைகளுள் இவரும் ஒருவர். 


உடற்பயிற்சி:


தென்னிந்திய நடிகைகளில் கச்சித தேகத்துடன் இருப்பவர்களுள் தமன்னா ஒருவர். தினமும் 30-40 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வதை இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இவருக்கென்று உடற்பயிற்சி கூடத்தில் பிரத்யேக நிபுணர் ஒருவரும் உள்ளாராம். கார்டியோ உடற்பயிற்சி, முதுகு மற்றும் கைகளுக்கான உடற்பயிற்சி என இவர் பலவற்றை மேற்கொள்கிறார். இதனால் இவரது சருமம் என்றும் இளமையாக இருக்கிறது. 


முகத்தில் சந்தனம், முல்தானி மெட்டி ஆகியவற்றையும் தமன்னா அடிக்கடி உபயோகிப்பாராம். மன அழுத்தத்தை குறைக்கவும், உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளவும் சருமத்தை பாதுகாக்கவும் இவர் யோகா பயிற்சிகளை மேற்கொள்வதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ‘இந்த’ 5 ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் நடக்காதாம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ