‘இந்த’ 5 ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் நடக்காதாம்..!

அனைவருக்கும் காதல் என்பது பொதுவானது என்றாலும், ஒரு சிலருக்கு காதல் திருமணம் நடக்காதாம். பெரியவர்களால் பார்த்து நிச்சயித்து வைக்கப்பட்ட திருமணம்தான் நடக்குமாம். யார் அந்த ராசிக்காரர்கள்? 

Written by - Yuvashree | Last Updated : Aug 10, 2023, 03:23 PM IST
  • இந்தியாவில் பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணங்கள் சகஜம்.
  • ஒரு சில ராசிகளுக்கு காதல் திருமணம் அல்லாமல் வீட்டில் நிச்சயிக்கப்படும் திருமணம்தான் நடைபெறுமாம்.
  • யார் அந்த ராசிக்காரர்கள்..?
‘இந்த’ 5 ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் நடக்காதாம்..!  title=

திருமணத்திற்கு காதல் என்பது முக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால் பலருக்கு காதல் திருமணம் கை கூடுவதில்லை. பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான் நடக்கிறது. அப்படி என்னதான் முக்கி முனகினாலும் கடைசியில் ஒரு சில ராசிக்காரர்கள் Arranged Marriageதான் செய்து கொள்வார்கள். 

பெரியவர்களால் பார்த்து வைக்கப்படும் திருமணம்:

யார் திருமணம் செய்து கொள்ள போகிறார்களோ அவர்கள் அல்லாமல் அவரவர் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பார்த்து முடிக்கும் திருமணம்தான், நிச்சயிக்கப்பட்ட திருமணம் எனப்படுகிறது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இந்த வகையிலான திருமணங்கள் மிகவும் சகஜமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போது பல காதல் திருமணங்கள் நடைப்பெற்று வந்தாலும், பெரியவர்களால் பார்த்து வைக்கப்படும் திருமணங்கள் மட்டும் நிறுத்தி வைக்கப்படுவதில்லை. அப்படி காதல் திருமணம் அல்லாமல் பெரியவர்களால் பார்த்து வைக்கப்படும் ஆட்களைத்தான் குறிப்பிட்ட 7ராசிக்காரர்கள் திருமணம் செய்து கொள்வராம். அவர்கள் யார் யார்? 

மேலும் படிக்க | தம்பதிகளின் கவனத்திற்கு... நீடித்த வாழ்வுக்கும், உறவுக்கும்... 'அதை' பற்றி பேசுங்கள்!

1.ரிஷபம்:

ரிஷப ராசிக்கரர்கள் எந்த உறவை எடுத்தாலும் அதில் பாதுகாப்பு இருக்கிறதா, அந்த உறவு நீண்ட நாட்கள் வருமா என்பதை அலசி ஆராய்வர். பல காலம் ஒன்றாக இருக்கும் உறவுகள்தான் இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதனால், தன் குடும்பத்தினரின் உணர்வுகள் மற்றும் அவர்களின் மதிப்புகளுக்கும் மதிப்பு கொடுப்பர். அதனால், இவர்கள் பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களையே விரும்புவர். தன்னுடைய எண்ணங்களும் செயல்களும் யாருடன் பொருந்தி போகிறதோ அவர்களைத்தான் இவர்கள் தங்கள் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பார்களாம்,

2.கன்னி: 

கன்னி ராசிக்கரர்கள் எப்போதும் தங்களை சுற்றி யார் இருக்கிறார்கள், யார் யார் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனித்துக்கொண்டே இருப்பர். இவர்களுக்கு நிலையான உறவில் இருக்கத்தான் பிடிக்கும். இவர்களுக்கு பெரியவர்களால் பார்த்து வைக்கப்பட்ட வரன்தான் பாதுகாப்பானது என்று தோன்றும். இவர்களுக்கு அது ஒருவகை நிம்மதியை தரும். அதனால், இந்த ராசிக்காரர்கள் பெற்றோரால் பார்த்து வைக்கப்படும் ஆளைத்தான் கரம் பிடிப்பர் என கூறப்படுகிறது. 

3.மகரம்:

மகர ராசிக்கரர்கள் கலாச்சாரம், குடும்ப பற்று போன்ற பல விஷயங்களில் பின்னி பிணைந்திருப்பர். இவர்களுக்கு யாரையாவது பிடித்திருந்தால் அவர்களின் குடும்பத்தினர் என்ன செய்கின்றனர் என்பது முதற்கொண்டு தெரிந்து வைத்துக்கொள்வர். சமூகம், நாலு பேரு நாலு விதமா பேசிருவாங்க என்று பயப்படும் ராசிகளுள் இவர்களும் ஒருவர். அதனால் இவர்களுக்கு பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணம் தான் செட்டாகுமாம். 

4.கடகம்:

கடக ராசியுடையோர் எதை யோசித்தாலும் யாரை யோசித்தாலும் ஆழ்ந்து ஆராய்ந்து யோசிப்பர். இவர்களுக்கு நிலைத்தன்மை அற்ற உறவு பிடிக்காது. அதனால், பலரால் பார்த்து வைக்கப்படும் பெண்ணையோ/ஆணையோதான் திருமணம் செய்து கொள்ள விரும்புவர். தங்களின் அன்பிற்குரியோரை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் இவர்கள், அவர்களின் உணர்வுகளையும் காயப்படுத்தக்கூடாது என்று நினைப்பார்கள். அதனால், தனது குடும்பத்தில் பார்த்து வைப்பவரையே திருமணம் செய்து கொள்வர். 

5.விருச்சிகம்:

விருச்சிக ராசி உடையோர் யாரிடம் என்ன உணர்வினை காட்டினாலும் அதில் மிகவும் உண்மையாக இருப்பர். நம்பிக்கை, அன்பு, அக்கறை போன்ற விஷயங்கள் இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். இவர்களுக்கும் நெடுகாலம் நிலைக்காத உணர்வுகள் பிடிக்காது. அதனால் இவர்கள் வீட்டில் நிச்சயித்தவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பர். தன்னை விட தன் குடும்பத்தினர் தனக்கான விஷயங்களை நன்றாக தேர்ந்தெடுப்பர் என்பது இவர்களின் எண்ணமாக இருக்கும். 

மேலும் படிக்க | திருமண பதிவுச் சான்றிதழை ஆன்லைனில் பெறுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News