வெறும் Rs.22-ல் கிடைக்கும் Jio Phone ப்ரீபெய்ட் data vouchers: அதிரடி offer-ன் விவரம் உள்ளே
இந்தியாவின் மிகப்பெரிய, முக்கிய தொலைத் தொடர்பு பிராண்டான ரிலயன்ஸ், அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்காக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய, முக்கிய தொலைத் தொடர்பு பிராண்டான ரிலயன்ஸ், அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்காக பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. அழைப்புகள் மற்றும் தரவு என இந்த திட்டங்கள் மூலம் பயனர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.
இப்போது ரிலயன்ஸ் (Reliance) தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக ரூ .22 –வில் தொடங்கும் ஐந்து புதிய தரவுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஜியோஃபோன் டேட்டா வவுசர்கள் ரூ.22, ரூ.52, ரூ.72, ரூ.102 மற்றும் ரூ. 152 ஆகிய விலைகளில் கிடைக்கின்றன.
அனைத்து பேக்குகளும் பயனர்களுக்கு தரவை மட்டுமே வழங்கும் வகையில் உள்ளன. அதாவது கூடுதல் தரவுகளுக்கு கூடுதல் தொகுப்பாக அவற்றைப் பயன்படுத்தலாம். JioPhone தரவு வவுச்சர்கள் இப்போது Jio இணையதளத்தில் நேரலையில் உள்ளன, அதாவது லைவ் ஆகியுள்ளன.
ALSO READ: BSNL அளித்த Good News! இலவசமாக பெறுங்கள் 4G SIM கார்டு!
பிஜிஆர் இந்தியாவைப் பொறுத்தவரை, ரூ .22 டேட்டா வவுச்சர் 2GB டேட்டாவிற்கான ஆதரவையும், ரூ .52 6 GB டேட்டாவையும், ரூ 72 பேக் பயனர்களுக்கு 14 GB டேட்டாவையும் வழங்கும். தினசரி 500MB வரையிலான வரம்பை வழங்க 14 GB தரவு பிரிக்கப்படும். ரூ 102 மற்றும் ரூ .152 டேட்டா பேக்குகள் 30 GB மற்றும் 60 GB டேட்டாவை வழங்கும் மற்றும் முறையே நாளொன்றுக்கு 1 GB மற்றும் 2 GB –ஐ அனுமதிக்கும். ஐந்து தரவு வவுச்சர்களும் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
சமீபத்தில், ஜியோபோனுக்கான ரூ .749 ஆண்டு திட்டத்தையும் நிறுவனம் அறிவித்தது. இது வரம்பற்ற குரல் அழைப்பு (Voice Call) மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவை (Data) 12 மாதங்கள் அதாவது ஒரு வருடத்திற்கு வழங்கும். இது ஏற்கனவே இருக்கும் JioPhone பயனர்களுக்கானது. புதிய ஜியோபோன் 2021 சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் கீழ், பயனர்கள் ஜியோஃபோனை (Jio Phone) வாங்கி வரம்பற்ற அழைப்பு மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மாதத்திற்கு 2 GB தரவு பெறலாம். இதன் விலை ரூ .1,999 ஆகும். இதில் ரூ .1,499 திட்டமும் உள்ளது. இதில் ரூ .1,999 திட்டத்தில் உள்ள அதே நன்மைகள் உள்ளன. ஆனால் இது ஒரு வருடத்திற்கானது. இந்த திட்டங்கள் இப்போது பயனர்களுக்குக் கிடைக்கத் தொடங்கிவிட்டன.
ALSO READ: மார்ச் இல் அறிமுகம் செய்யப்படும் சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR