மும்பை: தொலைதொடர்பு துறையில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய நிறுவனர் முகேஷ் அம்பானி, பல அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42-வது பொதுக்குழுவில் உரையாற்றிய அதிபர் முகேஷ் அம்பானி கூறியது, ஜியோ இணைய சேவை தொடங்கப்பட்ட 3 ஆண்டுகளில் 34 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது. இதை 50 கோடி வாடிக்கையாளர்களாக மாற்ற வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள். 4ஜி சேவைக்காக ரிலையன்ஸ் ஜியோ, இதுவரை ரூ.3.5 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை ஜியோ அடைந்துள்ளது. நாட்டில் மட்டும் மிகப்பெரிய (முதலிடம்) சேவைதாரராகவும், உலகிலேயே 2வது மிகப்பெரிய சேவைதாரராகவும் மாறி இருக்கிறோம் என்றுக் கூறினார். ஜியோ குடும்பத்தின் மீது நம்பிக்கை மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான்கு புதிய வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர முயற்ச்சி செய்து வருகிறோம். விரைவில் உங்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. அதன்படி, நாடு முழுவதும் இணையம், வீடுகளுக்கு இணையம், நிறுவனங்களுக்கான பிராட் பேண்ட் சேவை, சிறுதொழில் நிறுவனங்களுக்கான பிராட்பேண்ட் சேவை ஆகியவை எங்கள் 4 திட்டமாகும்.
மிகவும் எதிர்பார்த்திருந்த ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைமுறைக்கு வர உள்ளது. வீடுகளுக்கு ஃபைபர் கேபிள்கள் மூலம் பிராட்பேண்ட் சேவை வழங்கும் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் இதுவரை 1.50 கோடிபேர் முன்பதிவு செய்து உள்ளனர் என்றும், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது 2 கோடி வீடுகள், 1,600 நகரங்களில் 1.5 கோடி வர்த்தக நிறுவனங்களை ஏற்படுத்தித் தரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
> ஜியோ ஃபைபர் திட்டத்தில் வீடுகளில் இணைப்பு பெற்ற பின் இந்தியா முழுவதும் இலவசமாக மொபைல், லேண்ட் லைனில் பேச முடியும்.
> இதன் பிராட்பேண்ட் இணையதள வேகம் 100 எம்பிபிஎஸ் ஆகவும் அதன்பின் 1 ஜிபிபிஎஸ் ஆகவும் மாறும்.
> ஜியோ ஜிகா ஃபைபர் சேவைக்கு மாதம் 700 முதல் 10000 ரூபாய் வரை சந்தா தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
> அளவில்லா இலவச அழைப்புகள், அதிவேகமான 100 எம்பிபிஎஸ் வேகத்தில் இணையதளம்
> வாழ்நாள் சந்தாதாரராக இணைபவர்களுக்கு இலவச எல்இடி டிவி வழங்கப்படும்.
> சர்வதேச அளவில் பேசுவதற்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அளவில்லாமல் பேசுவதற்கு மாதத்துக்கு ரூ.500 திட்டம் இருக்கிறது.
> 2020-ம் ஆண்டில் ஜியோ ஜிகா ஃபைபர் திட்டத்தில் புதிய திரைப்படங்கள் பார்க்கும் வசதி அறிமுகமாகிறது.
> திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை அன்றே ஜிகா ஃபைபர் பிரீமியம் வாடிக்கையாளர்கள் பார்க்க முடியும்.
> ஜியோ ஃபைபர் வெல்கம் ஆஃப் எனும் திட்டமும் அறிமுகமாகிறது.
> இந்த ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தாவைத் தேர்வு செய்தால், அவர்களுக்கு இலவசமாக எச்டி எல்இடி தொலைக்காட்சி அல்லது 4கே டிவி மற்றும் 4கே செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படும்.
இதுபோன்ற அதிரடி அறிவிப்பு முகேஷ் அம்பானி இன்று வெளியிட்டார். இது மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.