WOW... இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் மூலம் IPL லைவ் ஸ்ட்ரீமிங்கை இலவசமா பார்க்கலாம்!
ரிலையன்ஸ் ஜியோ சில ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இலவச IPL 2020 லைவ் ஸ்ட்ரீமிங்கை வழங்குவதாக தெரிவித்துள்ளது!!
ரிலையன்ஸ் ஜியோ சில ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இலவச IPL 2020 லைவ் ஸ்ட்ரீமிங்கை வழங்குவதாக தெரிவித்துள்ளது!!
உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்று, IPL தொடரை நடத்தவிடாமல் கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றிவிடுமோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, மார்ச் மாதம் நடக்கவிருந்த IPL போட்டி கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த BCCI முடிவு செய்தது.
இதற்கான ஏற்பாடுகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் முன்னதாகவே தொடங்கி விட்டது எனவும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடக்க இருக்கும் IPL போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வருகிற ஆகஸ்ட் 20 முதல் ஐக்கிய அரபு அமீரகம் வார உள்ளனர் என தகவல்கள் வெளியாகி வருகிறது. IPL போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளது. அதேபோல் இந்த தொடரில் பங்கேற்கும் அனைவரும் BCCI விதித்துள்ள முன்னெச்சரிக்கை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இந்நிலையில், செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் IPL அதிகாரப்பூர்வ ஸ்ட்ரீமிங் ஹாட்ஸ்டாரில் காணலாம். இந்த வருட IPL போட்டிக்கான லைவ் ஸ்ட்ரீமிங் உரிமத்தை ஹாட்ஸ்டார் தான் பெற்றுள்ளது. ஜியோ பயனர்களுக்கு நிறுவனம் சிறந்த திட்டங்களை வழங்குகிறது. ஸ்மார்ட்போன், ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் ஆகிய சில திட்டங்களின் கீழ் ரீசார்ஜ் செய்யும் போது பயனர்கள் IPL போட்டியை நேரலையில் காணலாம்.
ALSO READ | தோனிக்கும் ரெய்னாவுக்கும் இடையிலான தனித்துவமான ஒற்றுமை!! பூஜ்ஜியம் + ஓய்வு
ரூ.849 சில்வர் திட்டத்தின் கீழ் ரீசார்ஜ் செய்யும் போது ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்கள் IPL 2020 தொடரை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து பார்க்கலாம். இந்த திட்டங்களில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் VIP இலவச வருடாந்திர சந்தாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் மாதந்தோறும் 800 GB டேட்டா தரவு மற்றும் வரம்பற்ற குரலழைப்பு என பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரூ.401 திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குவதோடு இதிலும் ஹாட்ஸ்டார் VIP இலவச அணுகலை நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 90 GB அதிவேக டேட்டாவை நிறுவனம் 28 நாட்களுக்கு வழங்குகிறது.
IPL போட்டி செப்டம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருக்கின்றனர். மறுபுறம் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக தோனி விளையாடிய ஒருநாள் போட்டி கடந்த வருடத்திற்கு முன்பு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் செமி ஃபைனல் ஆகும்.