புதுடெல்லி: ஸ்டேட் பேங்க் ஆஃப் இண்டியாவில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றன. அரசு வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு பொன்னான வாய்ப்பு. பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் கேடரில் ஜூனியர் அசோசியேட் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கிவிட்டது.  2022 செப்டம்பர் 27ம் தேதி வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.  sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதிகள், நிபந்தனைகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற முக்கிய விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SBI ஆட்சேர்ப்பு 2022: முக்கியமான தேதிகள்
எஸ்பிஐ ஜூனியர் அசோசியேட் விண்ணப்ப செயல்முறை 2022 தொடங்கும் தேதி: செப்டம்பர் 7, 2022
எஸ்பிஐ எழுத்தர் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்வதற்கான கடைசி தேதி: செப்டம்பர் 27, 2022


மேலும் படிக்க | ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி?


SBI ஆட்சேர்ப்பு 2022: காலியிட விவரங்கள்
நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐயில் 5008 ஜூனியர் அசோசியேட் (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) காலியிடங்களை நிரப்பும் ஆட்சேர்ப்பு இயக்கம் இது.  


SBI ஆட்சேர்ப்பு 2022: தகுதி அளவுகோல்கள்
வயது வரம்பு
இந்த எஸ்பிஐ பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்2022,  ஆகஸ்ட் 1ம் நாளன்று 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் சமமான படிப்பு. ஒருங்கிணைந்த இரட்டைப் பட்டப்படிப்பு (IDD) சான்றிதழைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 30.11.2022 அன்று அல்லது அதற்கு முன் ஐடிடியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


மேலும் படிக்க | QR கோடை ஸ்கேன் செய்யவேண்டாம்! வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ எச்சரிக்கை!


பட்டப்படிப்பின் இறுதியாண்டு/ செமஸ்டரில் இருப்பவர்களும், தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அது தற்காலிகமானதாக கருதப்படும். 30.11.2022 அன்று அல்லது அதற்கு முன் பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை சமர்ப்பித்த பிறகே, அது முழுமையான தேர்வாக இருக்கும். 30.11.2022க்கு தேதிக்கு முன்னதாக கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இறுதி ஆண்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 


SBI ஆட்சேர்ப்பு 2022: விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 750 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ XS பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  


SBI ஆட்சேர்ப்பு 2022: தேர்வு நடைமுறை
பூர்வாங்க மற்றும் முதன்மை தேர்வுகள் மற்றும் குறிப்பிட்ட உள்ளூர் மொழிகளில் தேர்வுகள் நடைபெறும். தேர்வுகள் ஆன்லைன் வழியில் நடைபெறும்.


மேலும் படிக்க | மத்திய அரசுப் பணி! தமிழ்நாட்டில் அருமையான சம்பளத்தில் வேலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ