இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 20 வரை ippbonline.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
IPPB GDS ஆட்சேர்ப்பு நடைமுறையில், தற்போது 650 எக்ஸிகியூட்டிவ் பதவிகள் காலியாக இருக்கின்றன. இந்த காலியிடங்களுக்கு அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


விண்ணப்பிக்கத் தகுதி 
வயது வரம்பு: ஏப்ரல் 30, 2022 தேதியின்படி 20 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.


கல்வித் தகுதி: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட (அல்லது) அரசு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனம்/ வாரியத்திலிருந்து பட்டதாரி பட்டம்.


குறைந்தபட்ச அனுபவம்: GDS ஆக குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்.


விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் 700 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.


மேலும் படிக்க | இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு - 1044 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு


இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியாக உள்ள 650 எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் படிப்படியாக:
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ippbonline.com ஐப் பார்வையிடவும்
வேலைவாய்ப்புகள் என்ற ஐகானை கிளிக் செய்யவும்
இப்போது  “Advertisement for Engagement of Grameen Dak Sevaks to IPPB” (தேர்வுகள் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே எழுதமுடியும்) கீழ் விண்ணப்ப இணைப்பு இருக்கும்.
இந்தப் பகுதியில் உங்களை பதிவு செய்துக் கொண்டு விண்ணப்ப செயல்முறையைத் தொடரவும்
தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
விண்ணப்ப கட்டணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பிக்கவும்
எதிர்கால தேவைக்காக விண்ணப்பத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்


மேலும் படிக்க | பயிற்சி இல்லாமலே போட்டித்தேர்வில் வெற்றி பெற எளிய வழிகள்!


தேர்வு நடைமுறை
ஆன்லைன் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இருந்தபோதிலும், தேவைப்பட்டால், மொழித் தேர்ச்சித் தேர்வை நடத்துவதற்கு வங்கிக்கு உரிமை உள்ளது.


தேர்வில் தலா 1 மதிப்பெண் வீதம் 120 கேள்விகள் இருக்கும். தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் இருக்காது. தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும் என்பது மதிப்பெண்களின் தகுதி அடிப்படை ஆகும்.
90 நிமிடங்களில் மொத்தம் 120 கேள்விகளுக்கு பதில் எழுதவேண்டும்.
ஆங்கில மொழி தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும்.


மேலும் விவரங்களுக்கு: secr.indianrailways.gov.in  என்ற இணையதளத்தை பார்வையிடவும்.


மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி தேர்வு ஜூலை 2 ஆம் தேதிக்கு மாற்றம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR