சென்னை: வேலைவாய்ப்புகளுக்காக பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். படித்து முடித்து புதிதாய் வேலை தேடுபவர்கள் மட்டுமல்ல, ஏற்கனவே ஒரு வேலையில் இருப்பவர்களும் நல்ல வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.


அரசுத்துறையிலும் வங்கியிலும் வேலை கிடைக்காதா என்று ஏங்கும் பலர் உள்ளனர். அவர்களுக்கு இந்தியன் வங்கி அரிய வாய்ப்பை வழங்குகிறது.இந்தியன் வங்கி Vertical Head பதவிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்ப நடைமுறையை தொடங்கியுள்ளது. இந்த பணியிடங்கள், சென்னையில் உள்ள வங்கிகளில் இருக்கும்.

 

இந்த வேலைவாய்ப்பு தொடர்பாக இந்தியன் வங்கி அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியன் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 13.07.2022 வரை இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கிடைக்கும். ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு 2022 க்கான அனைத்து இணைப்புகளையும் www.indianbank.in வலைத்தளத்தில் பெறலாம்.

 


 

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2022 விவரங்கள்

 

பணியின் பெயர்: Vertical Head for Cash Management Service

மொத்த காலியிடங்கள்: அறிவிக்கப்படவில்லை

பணியிடம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.07.2022

வயது வரம்பு

வயது வரம்பு: 35 – 55 க்குள் இருக்க வேண்டும்

 


 

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டம்/முதுகலை பட்டம்/பிஜி டிப்ளமோ/எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் – ரூ.1000/-

கட்டண முறை - ஆன்லைன்

விண்ணப்பதாரர்கள் கட்டணம்/கட்டணங்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் இணைய வங்கி மூலம் செலுத்த வேண்டும் /

NEFT/RTGS. விண்ணப்பப் படிவத்தில் குறிப்பு எண்/UTR எண் குறிப்பிடப்படும்

கணக்கு பெயர்: Engagement of Vertical Head for Cash Management Services

வங்கிக் கணக்கு எண்: 7244670091

வங்கி & கிளை: இந்தியன் வங்கி, ராயப்பேட்டை

கணக்கு வகை: நடப்புக் கணக்கு

IFSC குறியீடு: IDIB000R021

 


 

www.indianbank.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு 

அறிவிப்பை முழுமையாக படிக்கவும்

தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்

உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

 

இந்தியன் வங்கியில் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த Vertical Head பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பத்த பிறகு, விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தியதற்கான நகலை பதிவெடுத்து, அவற்றை ஆவணங்களுடன் இந்தியன் வங்கிக்கு அனுப்பி வைக்கவும். 

 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 

முகவரி: பொது மேலாளர் (CDO), இந்தியன் வங்கி கார்ப்பரேட் அலுவலகம், HRM துறை, ஆட்சேர்ப்பு பிரிவு 254-260, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை, பின் - 600 014, தமிழ்நாடு.

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ICF Railway Recruitment 2022: சென்னையில் 876 ரயில்வே காலிப்பணியிடங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR