BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - 55,000 ரூபாய் சம்பளம்... முழு விவரம்
BHEL நிறுவனத்தில் 55,000 ரூபாய் ஊதியத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிப்பதற்கு 27ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட், நவரத்னா நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்தியாவின் முதன்மையான தொழில்முறை எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், அதன் ஹைதராபாத் யூனிட்டிற்கு வாட்டர் ஃபிரண்ட் சப்போர்ட் இடங்களில் பணியமர்த்துவதற்கு, திட்டப் பொறியாளர்-Iஆக தற்காலிக அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
காலிப் பணியிட விவரம்
திட்ட பொறியாளர்-I பதவிக்கு என 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. Electronics பிரிவில் 21 பணியிடங்களும், Mechanical பதவிக்கு ஒரு பணியிடமும் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் விதிகளின்படி வயதானது அதிகபட்சம் 32க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இருந்து B.E / B.Tech முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
விண்ணப்பதாரர்களுக்கு ஒப்பந்தத்தின் 1ஆவது, 2ஆவது, 3ஆவது ஆண்டு மற்றும் 4ஆவது ஆண்டுக்கு முறையே ரூ.40,000, ரூ.45,000, ரூ.50,000 மற்றும் ரூ.55,000 என ஒருங்கிணைக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட தகுதியை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு 85 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும்.
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் 1:5 என்ற விகிதத்தில் மேற்கூறியவற்றின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.472 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேசமயம், SC மற்றும் ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=01.%20DETAILED%20WEBSITE%20ADVT%20ENGLISH-12-07-22.pdf என்ற தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | Ration Shops: ரேஷன் கடைகளின் செயல்முறையில் மாற்றம், பயனாளிகளுக்கு அதிகரிக்கும் நன்மை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ