Bank Holidays August 2022: உஷார் மக்களே!! ஆகஸ்ட் மாதம் பாதி நாட்களுக்கு வங்கிகள் இயங்காது

Bank Holidays August 2022: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆகஸ்ட் 2022-க்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, இந்த மாதம் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 21, 2022, 02:47 PM IST
  • ஆகஸ்ட் 2022 இல் வங்கி விடுமுறைகள்.
  • ஆகஸ்ட் மாதம் பாதி நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
  • இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளது.
Bank Holidays August 2022: உஷார் மக்களே!! ஆகஸ்ட் மாதம் பாதி நாட்களுக்கு வங்கிகள் இயங்காது title=

ஆகஸ்ட் 2022 இல் வங்கி விடுமுறைகள்: 2022 ஆம் ஆண்டின் 8 ஆவது மாதமான ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. இந்த மாதம் வங்கி தொடர்பான சில முக்கியமான பணிகள் உங்களுக்கு இருந்தால், இந்த மாத வங்கி விடுமுறை பட்டியலை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள். வங்கி விடுமுறை குறித்த தகவல் உங்களிடம் இருந்தால், அதற்கேற்ப உங்கள் பணிகளை நீங்கள் திட்டமிடலாம். இதன் மூலம் நீங்கள் ஏமாற்றத்தை எதிர்கொள்ளாமல் சீராக பணிகளை செய்து முடிக்கலாம். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறைப் பட்டியலின்படி, ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இதில் சுதந்திர தினம் 2022, ரக்ஷாபந்தன் 2022, ஜன்மாஷ்டமி 2022 போன்ற பண்டிகைகளும் அடங்கும். இந்த மாதம் வங்கி தொடர்பான முக்கியமான வேலைகளை நீங்கள் செய்ய வேண்டி இருந்தால், இந்த மாதத்திற்கான விடுமுறைகளின் பட்டியலை இங்கே தெரிந்துகொள்ளுங்கள். ரிசர்வ் வங்கி இதை வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட மொத்தம் 15 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது. ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை இங்கே காணலாம். 

மேலும் படிக்க | ஒவ்வொரு வங்கியும் வழங்கும் வீட்டு கடனுக்கான வட்டி விகிதம்! 

ஆகஸ்ட் 2022 வங்கி விடுமுறைகளின் பட்டியல்:
1 ஆகஸ்ட் 2022 - துருபகா ஷீ-ஜி திருவிழா (காங்டாக்)
7 ஆகஸ்ட் 2022 - முதல் ஞாயிறு
8 ஆகஸ்ட் 2022 - முஹர்ரம் (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்)
9 ஆகஸ்ட் 2022 - சண்டிகர், கவுகாத்தி, இம்பால், டேராடூன், சிம்லா, திருவனந்தபுரம், புவனேஸ்வர், ஜம்மு, பனாஜி, ஷில்லாங் தவிர நாடு முழுவதும் விடுமுறை.
11 ஆகஸ்ட் 2022 - ரக்ஷாபந்தன் (நாடு முழுவதும் விடுமுறை)
13 ஆகஸ்ட் 2022 - இரண்டாவது சனிக்கிழமை, நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
14 ஆகஸ்ட் 2022-ஞாயிறு, நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
15 ஆகஸ்ட் 2022-சுதந்திர தினம்
16 ஆகஸ்ட் 2022 - பார்சி புத்தாண்டு (மும்பை மற்றும் நாக்பூரில் விடுமுறை)
18 ஆகஸ்ட் 2022 - ஜன்மாஷ்டமி (நாடு முழுவதும் விடுமுறை)
21 ஆகஸ்ட் 2022-ஞாயிறு, நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
27 ஆகஸ்ட் 27 2022 - நான்காவது சனிக்கிழமை, நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
28 ஆகஸ்ட் 2022-ஞாயிறு, நாடு முழுவதும் வங்கிகளுக்கு விடுமுறை.
29 ஆகஸ்ட் 29 2022: ஹர்தாலிகா தீஜ் அனுசரிக்க சத்தீஸ்கர் மற்றும் சிக்கிமில் வங்கிகளுக்கு விடுமுறை
31 ஆகஸ்ட் 31 2022 - விநாயக சதுர்த்தி (குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)

மேலும் படிக்க | தபால் நிலையம் vs வங்கி: சேமிப்பு கணக்குகளுக்கு அதிக வட்டி தருவது யார்? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News